டெல்லி: இந்தியாவில் தற்போது வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் வரக்கூடிய பட்ஜெட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க கூடிய அறிவிப்புகள் வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
உலக அளவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு பொருளாதாரமாக இந்தியா இருந்து வருகிறது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடக்கூடிய வகையில் இந்தியாவில் இளைஞர்கள் பலரும் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இது எதிர்வரும் காலங்களில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

இந்தியாவிற்கு சாதகமே அதன் மக்கள் தொகை தான் , ஆனால் வேலையின்மை பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் அதுவே பெரிய சாபமாக மாறிவிடும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வரக்கூடிய பட்ஜெட் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு மோடி தலைமையிலான அரசின் கீழ் நாட்டின் பொருளாதாரம் எப்படி செல்ல போகிறது என்பதற்கான பாதையை அமைத்து தரக்கூடிய பட்ஜெட்டாக இருக்க வேண்டும் என்கின்றனர்.
செப்டம்பர் வரையிலான காலாண்டில் இந்திய பொருளாதாரம் 5.4 சதவீதம் என சுருங்கிவிட்டது. கடந்த ஏழு காலாண்டுகளில் இல்லாத அளவாக நாட்டின் பொருளாதார சரிவடைந்து இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் வேலைவாய்ப்பின்மை விகிதம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட துறைகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டுமென தொழிற்துறையினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
உற்பத்தி துறை, தட்டுமான துறை, ரியல் எஸ்டேட், காலனி உற்பத்தி , ஆடை உற்பத்தி துறைகளில் அடுத்த சில ஆண்டுகளுக்கு கவனம் செலுத்த வேண்டும், இந்த பிரிவுகளில் இயங்கக்கூடிய நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட நிதி உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியுடன் நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது அவர்களும் வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய திட்டங்களை வகுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அண்மையின் இந்தியா ஸ்கில் ரிப்போர்ட் 2024 என்ற பெயரில் வெளியான ஒரு அறிக்கை இந்திய இளைஞர்களில் 50 சதவீதம் பேரிடம் தான் தற்போது இருக்கக்கூடிய வேலைகளுக்கு தேவையான திறன்கள் இருக்கின்றன என தெரிவிக்கிறது.
மீதமுள்ள இளைஞர்களுக்கு போதிய திறன் இல்லாத காரணத்தால் அவர்களால் இந்த வேலை வாய்ப்பு போட்டியில் பங்கேற்க முடியவில்லை எனக் கூறியுள்ளது. எனவே வேலைவாய்ப்பை உருவாக்கும் அதே வேளையில் இளைஞர்களுக்கு அதற்கு ஏற்ற திறன் பயிற்சிகளை வழங்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வேலை வாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் சிறு ,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிறு தொழில்கள் மூலம் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 11 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது சிறு தொழில்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் தெரிய வருகிறது. 2023 ஆம் ஆண்டில் 17.83 மில்லியன் ஆக இருந்த சிறு தொழில்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 20.15 மில்லியன் என அதிகரித்துள்ளது.
இந்தியா தன்னுடைய பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் 2024 ஆம் ஆண்டிலிருந்து 2030 ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் பத்து மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என சர்வதேச முதலீட்டு நிறுவனமான கோல்ட்மேன் சச்ஸ் தெரிவித்துள்ளது. அரசு என்ன செய்ய போகிறது என்பது பிப்ரவரி 1ஆம் தேதி தெரிய வரும்.
Story Written By: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications