மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு, மாத சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கான நிலையான கழிவை புதிய வரி முறையில் ரூ.75,000ஆக உயர்த்தினார். மேலும் வரி அடுக்களிலும் திருத்தம் செய்தார். இந்த மாற்றங்களால் வரி செலுத்துவோருக்கு ரூ.17,500 நிகர ஆதாயம் கிடைக்கும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இன்னும் சில தினங்களில் அடுத்த நிதியாயண்டுக்கான மத்திய ப்ஜெட்டை அரசு தாக்கல் செய்ய உள்ளது.
இந்நிலையில், மந்தமான தேவையான கருத்தில் கொண்டு, வரி செலுத்துவோர் குறிப்பாக நடுத்தர வர்த்தகத்தினரின் சுமையை குறைக்க வரி விகிதங்களை மறுசீரமைக்க வேண்டும் என்ற வாதத்தை பொருளாதார நிபுணர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் வாதிட்டுள்ளனர்.

இதனால், நடுத்தர வரி செலுத்துவோர் விலைவாசி உயர்வை சமாளிக்க போராடுவதால், வருமான வரி விகிதங்களில் நிவாரணம் கிடைக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட்டில், புதிய வரிவிதிப்பு முறையில் விகிதங்களை செம்மைப்படுத்துதல், மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய பங்களிப்புகள் போன்ற அத்தியாவசிய செலவினங்களுக்கான சலுகைகளை வழங்க வாய்ப்பு உள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ காப்பீடுகளுக்கு ரூ.50,000 வரையும், ஓய்வூதியத் திட்ட பங்களிப்புகளுக்கு ரூ.1,00,000 வரை விலக்கு அளிக்க வேண்டும் பரிந்துரை செய்துள்ளது.
வருமான வரி விகிதம், அத்தியாவசிய செலவினங்களுக்கான சலுகைகளை உயர்த்துதல் தொடர்பாக நிபுணர்கள் 3 விதமான விவாதங்களை முன்வைத்துள்ளனர். முதலாவது, எதிர்வரும் பட்ஜெட்டில், ரூ.10-15 லட்சம் வரை வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ள தனிநபர்களுக்கு 15 சதவீதம் வரியை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, ஆண்டுக்கு ரூ12 -15 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது. எனவே புதிய வரி பிரிவை அமல்படுத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ16 முதல் 50 ஆயிரம் கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும்.
இரண்டாவது, மத்திய அரசு ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு வருமானம் ஈட்டுபவர்களுக்கான உச்ச வரி விகிதத்தை 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைத்தால், முன்மொழியப்பட்ட விலக்குகளுடன் சாத்தியமான வருவாய் பாதிப்பு ரூ.74,000 கோடி முதல் ரூ.1.1 லட்சம் கோடி வரை அதிகரிக்கக்கூடும்.
மூன்றாவது, வருமான வரி உச்ச விகிதத்தை 25 சதவீதமாக குறைப்பதோடு, ரூ.10-15 லட்சம் வரை வருமானம் சம்பாதிப்பவர்களுக்கு 15 சதவீதம் வரி அறிமுகப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் என்பிஎஸ் விலக்குகளையும் செயல்படுத்தினால் அரசுக்கு திட்டமிட்ட வருவாய் இழப்பு ரூ.85,000 கோடியிலிருந்து ரூ.1.2 லட்சம் கோடி வரை இருக்கலாம்.
இந்த விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், புதிய வரி விதிப்பு முறை படிப்படியாக பழைய வரி விதிப்பு முறைக்கு ஒத்திருக்கக்கூடும் என்ற அச்சம் காரணமாக, சலுகைகள் மற்றும் கழிவுகளை அறிமுகம் செய்வதில் அரசு அதிகாரிகள் எச்சரிக்கை இருக்கிறார்கள்.
அதேசமயம், வரி விதிப்பு முறைகளில் நன்மை அளிக்கும் ஒன்றை வரி செலுத்துவோர் தேர்வு செய்யும் விருப்பத்தை வழங்கும், தனிநபர்கள் தங்கள் நிதி நலன்களுக்கு சிறப்பாக சேவை செய்யும் அணுகுமுறையை தேர்ந்தெடுக்க அனுமதிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Story written by: Subramaian
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications