உலகின் முன்னணி பொருளாதார நாடான அமெரிக்காவில் தொடர்ந்து வட்டி விகிதமானது அதிகரித்து வருகின்றது. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக பார்க்கப்பட்டாலும், இது அமெரிக்காவின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
எனினும் அமெரிக்காவின் மத்திய வங்கியானது, அடுத்த ஆண்டிலும் இந்த கடுமையான நடவடிக்கையானது தொடரும் என்று எச்சரித்து வருகின்றது.
ரெசசன் கன்பார்மா?
இதற்கிடையில் இது குறித்து 10 பொருளாதார நிபுணர்களில் 7 பேர் அமெரிக்காவின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு சரிவடையலாம். இதனால் ரெசசனை எட்டலாம் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டிக்கு மத்தியில் தேவையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்தலாம் என்றாலும், பெரியளவில் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
நிபுணர்களின் கணிப்பு?
சமீபத்திய ப்ளும்பெர்க் மாதாந்திர ஆய்வின் படி, 2023ல் வீழ்ச்சி விகிதமானது கடந்த நவம்பரில் 65% வீழ்ச்சிக்கான உயர்வினை கண்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட அதிகம். டிசம்பர் 12 - 15 வரையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், 38 பொருளாதார வல்லுனர்கள் ரெசசனுக்கு வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜிடிபி வளர்ச்சி
அடுத்த ஆண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 0.3% என்ற அளவில் மிகச்சிறிய அளவிலேயே இருக்கலாம். இதில் இரண்டாவது காலாண்டில் 0.7% சரிவினைக் காணலாம். இதே முதல் மற்றும் மூன்றாவது காலாண்டில் பெரியளவில் வளர்ச்சி இருக்காது என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் இரு பங்கை கொண்டிருக்கும் நுகர்வோர் செலவு, ஆண்டின் நடுத்தர காலத்தில் சற்றே வளர்ச்சி கண்டாலும் காணலாமென கணிக்கப்பட்டுள்ளது.
சங்கிலித் தொடராக சரிவு
அமெரிக்காவின் வட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உயர்ந்த பணவீக்கம், நிதி ஊக்கம் மற்றும் பலவீனமாக ஏற்றுமதி சந்தை என பல காரணிகளும் சந்தையில் பெரும் சவால்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடன் வட்டியும் அதிகரித்து வரும் சூழலில், ஆர்டர் மதிப்பும் குறையத் தொடங்கியுள்ளது. இது மற்ற வளர்ச்சிகளிலும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபெடரல் ரிசர்வ் வங்கி
ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது பணவீக்கம் 2% இலக்கினை எட்டும் வரையில் கடுமையான நடவடிக்கையினை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஃபெடரல் வங்கியின் வட்டி அதிகரிப்பானது 2007-க்கு பிறகு கணிசமாக தற்போது உயர்ந்துள்ளது. அடுத்த ஆண்டில் வட்டி இன்னும் அதிகரிக்கும்போதும் இன்னும் பிரச்சனை அதிகரிக்கலாம். அமெரிக்கா இதுவரையில் வட்டி குறைப்பது பற்றி யோசிக்கவில்லை. அதனை பரிசீலிக்கவும் இல்லை. தொடர்ந்து மத்திய வங்கியானது நடவடிக்கையை தொடருமானால், வேலை சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
வேலையின்மை அதிகரிக்கலாம்
2024ல் வேலையின்மை விகிதம் சராசரியாக 4.9% ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து உச்சத்தில் உள்ள பணவிக்கம் என்பது கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் மக்களில் வீடுகளில் செலவினங்களை குறைக்க வழிவகுக்கலாம். இது மேற்கோண்டு பொருளாதாரத்தினை மோசமான சரிவுக்கு தள்ளலாம். தனியார் முதலீடுகள் குறையலாம். இது மேற்கொண்டு பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு தொழில் துறையிலும் உற்பத்தியினை குறைக்க வழிவகுக்கலாம்.
இந்தியாவுக்கு பாதிப்பு?
அமெரிக்கா சரிவினை காணும் போதே, அது இந்தியாவில் இருந்து ஏற்றுமதியினை பாதிக்கலாம். இந்தியாவிலும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவில் மந்த நிலை ஏற்பட்டால் அது ஐடி துறையில் பெரியளவிலான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது அமெரிக்காவினை அதிகம் சார்ந்துள்ள இந்திய ஐடி துறையிலும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications