ஓசூரில் அடுத்த பிரம்மாண்டம்.. 16000 பேருக்கு வேலை ரெடி..!

தமிழ்நாட்டில் வேகமாக வளரும் தொழிற்துறை பகுதியாக இருக்கும் ஓசூரில் அடுத்தடுத்து புதிய நிறுவனங்கள் முதலீடு செய்து உற்பத்தி தளத்தை அமைக்க தயாராகி வரும் வேளையில், இதை வேகப்படுத்த தமிழ்நாடு அரசும், தனியார் நிறுவனங்களும் தொழிற்துறை பூங்கா அமைக்க தயாராகி வருகிறது. இந்த வரிசையில் எகோவேஸ்ட் ஸ்பேஸ் ரியாலிட்டி என்னும் நிறுவனம் ஓசூரில் தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை அமைக்க தயாராகியுள்ளது.

Ecovast Space Realty என்னும் நிறுவனம், ஓசூரில் 86 ஏக்கர் பரப்பில் சுமார் ரூ.660 கோடி முதலீட்டில் ஒரு புதிய தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்காவை அமைக்க உள்ளதாக சென்னை அப்டேட்ஸ் டிவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுக்குறித்து இந்நிறுவன தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

ஓசூரில் அடுத்த பிரம்மாண்டம்.. 16000 பேருக்கு வேலை ரெடி..!

Ecovast Space Realty நிறுவனம் குறித்து ஆய்வு செய்யும் போது இது பெங்களூரில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என தெரிய வந்துள்ளது. இந்நிறுவனம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆன நிலையில் இந்நிறுவனத்தின் தலைவர்களாக சிவானந்த விருபாக்சப்பா மற்றும் செந்தில் ஆகியோர் இருப்பதாகவும், இந்நிறுவனத்தின் அலுவலகம் பெங்களூர் கீதாஞ்சலி லேஅவுட் ஹால் 3வது ஸ்டேஜில் இருப்பதாக ஜௌபா கார்ப் தளத்தில் வாயிலாக தெரிய வந்துள்ளது.

தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா, சுமார் 16,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓசூர், தமிழ்நாட்டின் ஒரு முக்கிய தொழில்துறை மையமாக உள்ளது, இதில் வாகன உற்பத்தி, துணை உற்பத்தி, மற்றும் பிற தொழில்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இப்பூங்கா, உற்பத்தி, e-commerce, மூன்றாம் தரப்பு லாஜிஸ்டிக்ஸ் (3PL), மற்றும் விரைவு நுகர்வு பொருட்கள் (FMCG) துறைகளுக்கு சேவை செய்யும்.

தொழில்துறை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா என்பது, பல நிறுவனங்களுக்கு உற்பத்தி மற்றும் பொருட்கள் சேமிப்பு வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் ஒரு பெரிய பகுதி. இதில், தொழிற்சாலைகள், கிடங்குகள், மற்றும் போக்குவரத்து மையங்கள் அமைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு நிறுவனம் இங்கு பொருட்களை உற்பத்தி செய்து, அதை கிடங்கில் சேமித்து, விரைவாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்ப முடியும். இது, நிறுவனங்களுக்கு செலவை குறைத்து, பொருட்களை வேகமாக நகர்த்த உதவுகிறது.

இப்பூங்கா, ஓசூருக்கு அருகில், தேசிய நெடுஞ்சாலை 44 (NH 44) மற்றும் Satellite Town Ring Road-க்கு அருகே அமைந்துள்ளது. மேலும், இது SIPCOT பேஸ் 2 தொழிற்பேட்டைக்கு அருகில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் விநியோகத்தை வேகப்படுத்த முக்கியமானதாக அமையலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+