யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் கைது.. ரூ.6,200 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை..

கொல்கத்தா: மத்திய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக யூகோ வங்கி செயல்படுகிறது. இதன் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இதன் தலைவராகவும் மேலாண் இயக்குநராகவும் செயல்பட்ட சுபோத் குமார் கோயல் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.

யூகோ வங்கியின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குனருமான சுபோத் குமார் கோயலை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர். கொல்கத்தாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் கான்கேஸ்ட் ஸ்டீல் & பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு 6200 கோடி ரூபாய் கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் பேரில் தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் யூகோ வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனரான சுபோத் குமார் கோயலை மே 16ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

யூகோ வங்கியின் முன்னாள் தலைவர் கைது.. ரூ.6,200 கோடி கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை..

சுபோத் குமார் கோயல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மே 21 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் கான்கேஸ்ட் ஸ்டீல் & பவர் நிறுவனத்திற்கு கடன் வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து சிபிஐ இது தொடர்பான விசாரணையை நடத்தியது. பின்னர் அமலாக்கத்துறை அதிகாரிகளும் இதில் இணைந்து விசாரணை நடத்தினர்.

சுபோத் குமார் கோயல், யூகோ வங்கியின் முன்னாள் தலைவராக செயல்பட்ட போது சிஎஸ்பிஎல் நிறுவனத்திற்கு 6210 கோடி ரூபாயை கடனாக வழங்கியிருக்கிறார். அந்த நிறுவனம் அந்த கடன் தொகையை மோசடியாக வேறு செயல்களுக்கு பயன்படுத்தியிருக்கிறது. அது தெரிந்திருந்த போதும் முறைகேடாக லஞ்சம் பெற்றுக் கொண்டு சுபோத் குமார் கோயல் இந்த பண மோசடிக்கு உதவியதாக சொல்லப்படுகிறது . இதற்காக சுபோத் குமார் கோயல் பணம், சொத்து, ஆடம்பர பொருட்கள் உள்ளிட்டவற்றை பரிசாக பெற்றுள்ளார்.

சிஎஸ்பிஎல் நிறுவனம், தங்களுடைய ஷெல் நிறுவனங்கள் மூலம் சுபோத் குமார் கோயலுக்கு இவற்றை வழங்கியதாக விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் கோயல் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான பல்வேறு இடங்களும் சிஎஸ்பிஎல் நிறுவனம் தங்களுடைய ஷெல் நிறுவனங்கள் வாயிலாக வாங்கி தந்திருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது.

ஏற்கனவே அமலாக்கத் துறையினர் சிஎஸ்பிஎல் நிறுவனத்தின் தலைவரான சஞ்சய் சுரேகாவை 2024 டிசம்பரில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு சொந்தமான 510 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. அமலாக்கத்துறையினர் தற்போது கோயலிடம் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை காவலை நீட்டிப்பார்களா இல்லையா என்பது அன்றையதினம் தெரிய வரும், மேலும் வழக்கு குறித்த பல விவரங்களும் வெளிவர வாய்ப்புள்ளது.

Take a Poll

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+