மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அமலாக்க துறை இயக்குநரகம், இந்தியா - வளைகுடா நாடுகள் மத்தியில் விமான சேவை அளிக்கும் முன்னணி நிறுவனங்களின் ஒன்றான கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை கோரியுள்ளது.
கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி பரிமாற்றங்கள் குறித்து அமலாக்க துறை விசாரித்து வரும் வேளையில் வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான ஆவணங்களை கோரியுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் விதிகளின் கீழ் இந்த ஆவணங்கள் கோரப்பட்டு உள்ளதாக தெரிகிறது. மேலும் அமலாக்க துறையின் விசாரணை மிகவும் துவக்க கட்டத்தில் உள்ளது.

இதுகுறித்து கத்தார் ஏர்வேஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், சில பெயர் வெளியிட விரும்பாத ஊழியர்கள் அமலாக்க துறை ஆவணங்களை கேட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மாதம் கத்தார் ஏர்வேஸ் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக அமலாக்க துறை ஆவணங்களை கேட்டுள்ளதா என்பது உறுதியாக தெரியவில்லை. ஜிஎஸ்டி உளவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் (டிஜிஜிஐ) கடந்த மாதம் கத்தார் ஏர்வேஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமான நிறுவனங்களின் அலுவலகங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் தங்கள் தலைமை அலுவலகங்களில் இருந்து இந்தியக் கிளைகளுக்கு சேவைகளை இறக்குமதி செய்வதில் செய்யப்பட்ட பேமெண்டில் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்பட்டு ஜிஎஸ்டி உளவுத்துறையின் இயக்குநர் ஜெனரல் கடந்த மாதம் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
ஒரு வெளிநாட்டு விமான நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் அதன் இந்தியக் கிளையும் தனித்தனி நிறுவனங்களாகக் கருதப்படுவதாக ஜிஎஸ்டி விதிமுறைகள் கூறுகின்றன. இப்படியிருக்கையில் வெளிநாட்டில் இருக்கும் தலைமை அலுவலகங்களில் இருந்து சேவை, பொருட்களை இறக்குமதி செய்யும் போது அதற்கான வரியை முறையாக செலுத்த வேண்டும்.
மத்திய நிதி அமைச்சகம் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 6,000 போலியான இன்புட் டிாக்ஸ் கிரெடிட் கோரிக்கைகள் மூலம் சுமார் 57,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ததை DGGI கண்டறிந்துள்ளது. இது தொடர்பாக 500 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்திருந்தது.
ஆகஸ்ட் 2022 இல் அறிவிக்கப்படாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்த சில வாரங்களுக்குப் பிறகு வரி ஏய்ப்பு தொடர்பான விவாரணையை தொடர்ந்துள்ளது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications