ஹீரோ மோட்டோகார்ப் செயல் தலைவர் பவன் முன்ஜால் வீடு, அலுவலகம் என பல இடத்தில் தற்போது அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தி வருகிறது. பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக பவன் முன்ஜால் மற்றும் இவ்வழக்கில் தொடர்புடைய பலரின் வீடு மற்றும் அலுவலகத்தில் இன்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) விதிகளின்படி டெல்லி மற்றும் குருகிராம் பகுதிகளில் அமைந்துள்ள ஹீரோ மோட்டோகார்ப் செயல் தலைவர் பவன் முன்ஜால் வீடு, அலுவலகம் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

ஹீரோ மோட்டோகார்ப் செயல் தலைவர் பவன் முன்ஜால் மீதான வழக்கும், அமலாக்க துறையின் விசாரணைக்கும் என்ன காரணம். வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) இந்த அதிரடி சோதனைக்கு வழிவகுத்துள்ளது. பவன் முன்ஜால்-க்கு மிகவும் நெருக்கமான ஒருவர் தனது நிதி கணக்கில் அறிவிக்கப்படாத வெளிநாட்டு நாணயத்தை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டதன் மூலம் முன்ஜால் வீட்டில் சோதனை நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பவன் முஞ்சால் மற்றும் நாட்டின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார்கார்ப் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு விசாரணையின் ஒரு பகுதியாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனைக்கு பின்பு CBDT அமைப்பு ஹீரோ மோட்டார்கார்ப் பெயரை வெளியிடாமல் சமீபத்திய சோதனையில் 800 கோடி ரூபாய் அளவிலான முறையற்ற வர்த்தக செலவுகள் செய்யப்பட்டு உள்ளதை கண்டறிந்துள்ளோம் என தெரிவித்தது.
ஜூன் மாதம் கார்ப்பரேட் நிர்வாகச் சிக்கல்கள் தொடர்பாக ஹீரோ மோட்டோகார்ப் லிமிடெட் நிறுவனத்திற்கு எதிராக கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்சிஏ) விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு பின்னால் இருக்கும் முக்கிய குற்றச்சாட்டு ஹீரோ மோட்டோகார்ப் அதிகப்படியான ஷெல் நிறுவனங்களை இயக்கி வருவதாக எழுந்த குற்றச்சாட்டு தான்.
இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் தான் வர்த்தகம் மற்றும் நிதிபரிமாற்றம் செய்யும் நிறுவனங்களிடம் எத்தகையை உறவு வைத்துள்ளது, குறிப்பாக ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் Salt Experiences and Management Private Limited நிறுவனங்கள் மத்தியில் என்ன தொடர்பு என உத்தரவிடப்பட்டது.
Hero MotoCorp நிறுவனம் 2001 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் என்ற அங்கிகாரம் பெற்றது. இந்த பெயரை கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது ஹீரோ நிறுவனத்தின் மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. ஹிரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தற்போது 40 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை அறிவிப்பை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மும்பை பங்குச்சந்தையில் 2.70 சதவீதம் சரிந்து 3,115.20 ரூபாயாக வீழ்ந்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications