விஜய் மல்லையா, நீரவ் மோடி வழக்குகளை விசாரித்த ED அதிகாரி திடீர் பணி விருப்ப ஓய்வு..!!

இந்தியாவில் மோசடி வழக்குகள் என்ற உடனே பெரும்பாலான மக்களின் நினைவிற்கு வருவது விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் தான். இந்திய வங்கிகள் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடி.

விஜய் மல்லையா, நீரவ் மோடியின் மோசடிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த முக்கியமான அமலாக்கத்துறை அதிகாரி திடீரென பணி ஓய்வு பெற்றிருப்பது விவாத பொருளாகியுள்ளது. அதுவும் பணிக்காலம் முடிய பல ஆண்டுகள் முடியும் முன்பே அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். அமலாக்கத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியான சத்யபிரதா குமார் , தற்போது விருப்ப ஓய்வு கோரி பணி நிறைவு பெற்றள்ளார்.

விஜய் மல்லையா, நீரவ் மோடி வழக்குகளை விசாரித்த ED அதிகாரி திடீர் பணி விருப்ப ஓய்வு..!!

அமலாக்கத்துறையின் முன்னாள் சிறப்பு இயக்குனராக இருந்த சத்யபிரதா குமார். அவர் தற்போது பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். இவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பல பண மோசடி வழக்குகளை திறமையாக புலனாய்வு செய்தவர். குறிப்பாக வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் மதுபான ஆலை அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் வங்கிக் கடன் மோசடி வழக்கு மற்றும் மகாதேவ் பந்தய செயலி மோசடி போன்ற பல முக்கியமான வழக்குகளை விசாரித்து உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர்.

2004ஆம் ஆண்டு சுங்க வரித்துறையில் இந்திய வருவாய் பணி அதிகாரியாக பணியைத் தொடங்கிய இவர், ஓராண்டுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து மேற்கு வங்கத்தில் மேல்முறையீடுகள் ஆணையராக நியமிக்கப்பட்டார். அமலாக்கத்துறையில் 12 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ள மூத்த அதிகாரியான அவர், தற்போது விருப்ப ஓய்வு கோரி பணி நிறைவு பெற்றள்ளார். அவருக்கு தற்போது வயது 48. அவர் முறையாக பணி ஓய்வு பெற இன்னும் 11 ஆண்டுகள் இருக்கும் நிலையில், அவர் விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.தனது தனிப்பட்ட விருப்பங்களை செயல்படுத்த அவர் அரசுப் பணியில் இருந்து விலகுவதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வைர வியாபாரியான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடிக்கு அதிகமான நிதி மோசடியில் ஈடுபட்டு, 2018-ல் வெளிநாட்டிற்குத் தப்பியோடியவர். தற்போது அவர் லண்டன் சிறையில் உள்ளார். இந்தியாவின் ஒரு முக்கிய தொழிலதிபராகவும், மதுபானத் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபராகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்டவர் விஜய் மல்லையா. இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் சுமார் 9,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று ஏமாற்றிவிட்டு, தற்போது லண்டன் தஞ்சம் புகுந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+