இந்தியாவில் நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் நடைபெற்று வரும் வேளையில், சமீப காலமாக கார்ப்ரேட் நிறுவனங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதில் சமீபத்தில் சிக்கிய ஜென்சோல் இன்ஜினியரிங் தலைவர்கள் விவகாரம் பரபரப்பாகியுள்ளது.
ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தின் இணை நிறுவனர்களான புனீத் சிங் ஜாக்கி மற்றும் அவரது சகோதரர் அன்மோல் சிங் ஜாக்கி ஆகியோர், நிறுவனத்தின் பெயரில் வாங்கிய பல நூறு கோடி ரூபாய் கடனை தனது சொந்த விஷயத்திற்காக பல போலி நிறுவனங்கள் வாயிலாக திருப்பி தனது சொந்த கணக்கிற்கு பெற்று முறைகேடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக SEBI வெளியிட்டுள்ள அறிக்கையைத் தற்போது அமலாக்க துறை களத்தில் இறங்கி விசாரணை செய்ய முடிவெடுத்துள்ளது. இதன் முதல் படியாக நேற்று அதிரடியாக சோதனை செய்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. SEBI அறிக்கையில், நிதி முறைகேடுகளில் ஈடுபட்டு, நிறுவன நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அமலாக்க இயக்குநரகம் (ED), வியாழக்கிழமை ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் அலுவலகங்களில் சோதனை நடத்தியதுடன், நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான புனீத் சிங் ஜாக்கியை டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து அவரை கைது செய்து காவலில் எடுத்தது.
அமலாக்க துறை வெளிநாட்டு பரிமாற்ற மேலாண்மைச் சட்டத்தின் (FEMA) கீழ் டெல்லி, குருகிராம் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த கைது நடவடிக்கை மூலம் ஜென்சோல் இன்ஜினியரிங் முறைகள் மீதான விசாரணை அதிகாரப்பூர்வமாக துவங்கும் என தெரிகிறது.
புனீத் ஜாக்கி டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து ED அதிகாரிகளால் காவலில் எடுக்கப்பட்டார், அதே சமயம் அவரது சகோதரர் அன்மோல் ஜாக்கி தற்போது துபாயில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
செபியின் அறிக்கையின் படி புனீத் சிங் ஜாக்கி மற்றும் அன்மோல் சிங் ஜாக்கி ஆகியோர் தலைமை வகிக்கும் ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனம், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (PFC) மற்றும் இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (IREDA) ஆகியவற்றிடமிருந்து எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கும், EPC (Engineering, Procurement, and Construction) ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கும் கடன்கள் பெற்றுள்ளனர்.
ஆனால், கடனாக பெற்ற இந்த நிதியை புனீத் சிங் ஜாக்கி மற்றும் அன்மோல் சிங் ஜாக்கி ஆகியோர் அவர்களது உறவினர்கள் அல்லது நிறுவனத்துடன் தொடர்புடைய ஷெல் நிறுவனங்களின் பெயரில் உள்ள சொத்துகளுக்கு திருப்பி விடப்பட்டதாக குற்றச்சாட்டப்பட்டனர்.
செபியின் அதிர்ச்சி அளிக்கும் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ICAI அமைப்பு ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட் மற்றும் புளூஸ்மார்ட் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் 2023-24 நிதியாண்டுக்கான நிதி அறிக்கைகளை மறுஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது. ICAI அமைப்பு நிதி அறிக்கை மறுஆய்வு வாரியத்தின் (FRRB) புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவை எடுக்கப்பட்டதாக ICAI தலைவர் சரண்ஜோத் சிங் நந்தா தெரிவித்துள்ளார்.
இந்த மறுஆய்வு, ஜென்சோல் இன்ஜினியரிங் நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக என்பதை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஜென்சோல் இன்ஜினியரிங் லிமிடெட், எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் மீதான ED-யின் சோதனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள், முதலீட்டாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.
இந்த நிறுவனத்தின் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகள், பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் IREDA போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் கடன் வழங்கல் செயல்முறைகளையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன. இந்த சம்பவம், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எலக்ட்ரிக் வாகனத் துறைகளில் நிதி ஒழுங்குமுறையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்த முறைகேடு வழக்கில் புனீத் ஜாக்கியின் கைது நடவடிக்கை, இந்த விசாரணையில் ஒரு முக்கிய கட்டமாக கருதப்படுகிறது. அவரது சகோதரர் அன்மோல் ஜாக்கி துபாயில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ED அவரை கைது செய்யவோ அல்லது இந்தியாவுக்கு அழைது வரவோ முயற்சிகள் மேற்கொள்ளலாம்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications