மலையாள சினிமா நடிகர்கள் வைத்திருக்கும் ஆடம்பர கார்கள், முறைகேடாக வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி சுங்க வரித்துறையினர் கைப்பற்றப்பட்ட விவகாரம் தற்போது பெரியதாக வெடித்துள்ளது. இது தொடர்பாக சுமார் 17 இடத்தில் அமலாக்க துறை சோதனை நடத்தியது மட்டும் அல்லாமல் கோயம்புத்தூரை சேர்ந்த ஒரு ஏஜென்சி இதில் ஈடுப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமலாக்க இயக்குநரகத்தின் (ED) கொச்சி மண்டல அலுவலகம் இந்தியாவின் வெளிநாட்டு பரிவர்த்தனை மேலாண்மை சட்டம் (FEMA) 1999-ன் கீழ் இன்று கேரளா மற்றும் தமிழ்நாட்டில் 17 இடங்களில் தேடுதல் நடவடிக்கைகளை நடத்தி வருகிறது.

பெரும் பணக்காரர்கள், செலிப்ரிட்டிகள் வைத்திருக்கும் உயர்தர ஆடம்பர வாகனங்கள் முறைகேடாக இந்தியாவுக்கு கடத்தப்பட்டு, தவறான வெளிநாட்டு பரிவர்த்தனை மூலம் வாங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு, இது தொடர்பாக இன்று அமலாக்கத்துறை 17 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
அமலாக்க துறையின் இந்த சோதனை நடவடிக்கைகள், கேரளாவில் எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம், கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 17 இடங்களை நடத்து வருகிறது. இதேபோல் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டமும் இதில் அடங்குகிறது.
இந்த சோதனையில் மலையாள சினிமா நட்சத்திரங்களான பிரத்விராஜ், துல்கர் சல்மான், அமித் சக்கலக்கல் ஆகியோரின் வீடுகள் மற்றும் நிறுவனங்கள் என 17 இடங்களில் அடக்கும்.
இந்த சோதனையின் துவக்கத்திற்கு முக்கியமான காரணம் ஒரு ஊழல் குழுவின் செயல்பாடுகள் குறித்த தகவல் அமலாக்க துறைக்கு கிடைத்தது தான். இந்தியாவில் செகண்ட் ஹேண்ட் ஆடம்பர கார்களின் வர்த்தகம் சமீப காலமாக அதிகரித்துள்ளது, இந்த கார்கள் இந்தியா-பூட்டான் மற்றும் இந்தியா-நேபாளம் வழிகளைப் பயன்படுத்தி, லேண்ட் க்ரூசர், டிஃபெண்டர், மாசெராட்டி போன்ற ஆடம்பர வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்து, இந்தியாவில் குறைந்த விலைக்கு பதிவு செய்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஊழல், வெளிநாட்டு பரிவர்த்தனை சட்டங்களை மீறி, நாட்டின் பொருளாதார ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகக் கருதப்படுகிறது, இது சாதாரண குடும்பங்களின் வரி பணத்தை வீணாக்கும் என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதுதொடர்பான விசாரணை ஆரம்பகட்டத்திலேயே இருக்கும் நிலையில், இதில் முக்கியமான விஷயம் வெளியாகியுள்ளது. கோயம்புத்தூர் சார்ந்த ஒரு நெட்வொர்க் இதில் தொடர்புடையதாக தெரிகிறது.
இந்த கோவை நெட்வொர்க் இந்திய இராணுவம், அமெரிக்க தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் (MEA) என்று கூறப்படும் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்தியா-பூட்டான் மற்றும் இந்தியா-நேபாளம் வழிகளில் சட்டவிரோத இறக்குமதியை மேற்கொண்டுள்ளது.
மேலும் இந்த கோவை நெட்வொர்க், அருணாச்சல் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போலி ஆர்.டி.ஓ. பதிவுகளை உருவாக்கி, வாகனங்களை பெரும் பணக்காரர்கள் உள்ளிட்ட சினிமா பிரபலங்களுக்கு குறைந்த விலையில் விற்றுள்ளதாக ANI டிவீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த செயல்முறையில் பெரும் பிரச்சனையே, ஆடம்பர வாகனங்களின் உண்மையான மதிப்பை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வந்து அதீத லாபத்தைப் பெறுவதற்கு உதவியாக இருந்ததுள்ளது.


Click it and Unblock the Notifications