டெல்லி: சத்தீஸ்கர் மாநிலத்தின் மதுபான ஊழல் தொடர்பான விசாரணையின் அடுத்தகட்டமாக, அமலாக்கத் துறை (ED) கடந்த வெள்ளிக்கிழமை அன்று சுமார் ரூ. 205 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக நடந்த விசாரணையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு காலகட்டங்களில் தொடர்புடைய இந்த ஊழலில் சம்பந்தப்பட்டவர்களை அமலாத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமலாக்கத்துறை கண்டுபிடித்தது என்ன?: சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபான ஊழல் தொடர்பான வழக்கில், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனில் துடேஜாவை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அந்த வழக்கில் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதன்படி துதேஜாவின் ரூ.15.82 கோடி மதிப்புள்ள 14 சொத்துக்களும், ரூ.116.16 கோடி மதிப்புள்ள ராய்ப்பூர் மேயர் மற்றும் காங்கிரஸ் தலைவருமான ஐஜாஸ் தேபரின் மூத்த சகோதரரான அன்வர் தேபரின் 115 சொத்துகளும், விகாஷ் அகர்வால் என்ற சுப்புவின் ரூ.1.54 கோடி மதிப்புள்ள 33 சொத்துகளும், அரவிந்த் சிங்கின் ரூ. 12.99 கோடி மதிப்புள்ள சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளள்ளது.
மேலும், இந்திய தொலைத்தொடர்பு சேவை அதிகாரி மற்றும் கலால் துறை சிறப்பு செயலாளர், அருண்பதி திரிபாதிக்கு சொந்தமான ரூ. 1.35 கோடி மதிப்புள்ள சொத்துகளும், மதுபான வியாபாரி திரிலோக சிங் தில்லானுக்கு சொந்தமான ரூ. 28.13 கோடி மதிப்புள்ள சொத்துக்களும், நவீன கேடியாவுக்கு சொந்தமான ரூ.27.96 கோடி மதிப்புள்ள நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆஷீஷ் சவுரப் கேடியா வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ரூ.1.2 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் நெக்ஸ்ஜென் என்ஜிடெக் பவர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
துதேஜாவின் இதுபோன்ற செயலினால், மது வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு சட்டவிரோதமாக 2,100 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துள்ளார். இந்த சட்டவிரோத பணத்தில் ஒரு பெரிய பகுதியை துதேஜாவும் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
சட்டவிரோதமான இந்த மதுபான ஊழல் 2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நடந்துள்ளது. வரி செலுத்தப்படாத மதுபானங்கள், எவ்வித பதிவும் இன்றி, ரகசியமாக விற்பனை செய்யப்பட்டதால், அரசுக்கு எந்தப் பணமும் வரவில்லை என்று அமலாக்கத்துறையினர் கூறியுள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications