எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்ட் எம்டி ராதிகா குப்தா விமான நிறுவனங்கள் வழங்கும் பாக்ஸ் ஃபுட்ஸ்களில் சாண்ட்விச்கள் கொடுக்கப்படுவது குறித்து குற்றம்சாட்டியுள்ளார். அதற்கு பதிலாக நமது இந்திய காலை உணவு விருப்பங்கள் வழங்கவும் கேட்டுகொண்டார். சாண்ட்விச்சை விட ஆரோக்கியமான மற்றும் சுவையான பல்வேறு காலை உணவு விருப்பங்கள் இந்தியாவில் இருப்பதாகவும், இனிமேல் அத்தகைய உணவுகளை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விமானங்களில் வழங்கப்படும் சாண்ட்விச்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஏர்லைன்ஸ்கள் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுத் தொழில்களை நிறுத்தவும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தனது X தளத்தில் பதிவிட்ட அவர், சாண்ட்விச்சை விட ஆரோக்கியமான மற்றும் சுவையான பல்வேறு காலை உணவு விருப்பங்கள் இந்தியாவில் இருப்பதால் அவற்றை வழங்க ஏற்பாடு செய்ய முயற்சியெடுத்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பதிவில், விமான நிறுவனங்கள் காலை உணவு என்ற பெயரில் பாலாடைக்கட்டி மற்றும் கோல்ஸ்லாவை (வெஜ் சாண்ட்விச்) நிரப்பி இரண்டு ரொட்டிகளை கொடுக்கும் பெட்டி உணவு தயாரிப்பாளர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். இது இந்தியா, மேற்கு நாடு அல்ல என்றும், நம்மிடம் அற்புதமான காலை உணவுகள் உள்ளது. பரோட்டா, இட்லி, டோக்லாஸ் மற்றும் எண்ணற்ற உணவுகள் வகைகள் உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது மற்று சுவையானது. அத்துடன் விலையும் குறைவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு நேற்று பகிரப்பட்டது. அதிலிருந்து தற்போது வரை இந்த போஸ்ட் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த போஸ்ட்டுக்கு 10,000 லைக்குகள் வந்துள்ளன. அதேபோல், பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பல சமூக ஊடக பயனர்கள் குப்தாவின் வேண்டுகோளுக்கு ஆதரவு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
அதன்படி ஒரு பயனர் ஏர்லைனில் எந்த உணவும் ஆரோக்கியமானதாக இல்லை மேடம், எனவே வீட்டிலிருந்து உணவு சாப்பிட்டுவிட்டு வருவதே சிறந்தது என்ற கருத்தை பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் இதைச் சொன்னதற்கு நன்றி. நம்மிடம் உள்ள பல்வேறு காலை உணவு விருப்பங்களுடன், விமான நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
டாடாவுக்குச் சொந்தமான ஏர் இந்தியா தன் இணையதளத்தின்படி வெளியிடப்பட்டுள்ள மெனுவில், 60 நிமிடங்களுக்குள் டெட்ரா பேக் பானத்துடன் குக்கீகளை வழங்குகிறது. அதேபோல், 61-120 நிமிடங்களுக்கு இடைப்பட்ட விமானங்களில் டெட்ரா பேக் பானத்துடன் கூடிய சைவ சாண்ட்விச்களை வழங்குகிறது. மேலும், 120 நிமிடங்கள் அல்லது இரண்டு மணி நேரத்திற்கும் மேலான விமானங்களில் அசைவம் மற்றும் சைவ உணவுகளைத் தேர்ந்தெடுத்து சூடான உணவுகளை வழங்குகிறது.
ஏர் இந்தியாவில் புக் செய்யப்படும் விமான டிக்கெட்டில் உணவு பட்டியல் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற கேரியர்கள் தனித்தனி கட்டணம் அல்லது முன்பதிவு செய்யப்பட்ட மெனுவில் உள்ள பொருட்களை விற்கின்றன. தற்போது விமான நிறுவனங்கள் காலை உணவுகளில் இந்திய உணவுகளை வழங்க வேண்டும் என்பதே விமானத்தில் பயணம் செய்யும் அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications