இன்றைய காலகட்டங்களில் பொதுவாக பெரும் பணக்காரர்களானாலும், புதிய பணக்காரர்களானாலும், செலிபிரிட்டிகள் அந்தஸ்து பெற்ற அனைவரும் குறைந்தது நான்கு ஐந்து ஆடம்பர கார் வைத்திருப்பது வாடிக்கையாகி வருகிறது. தற்போது ஆடம்பர கார்கள் வாங்குவது புதிய ட்ரெண்ட் ஆகியுள்ள நிலையில், புதிய கார்கள் வந்தாலே, பெரும்பாலும், அரசியல்வாதிகள், நடிகர்கள் கோடிகளை கொடுத்து வாங்கி வருகின்றனர். அதேபோல், தமிழ் சினிமா துறைகளில், படம் எடுத்து அந்த படம் வெற்றி பெற்று விட்டால் அந்த படக்குழுவினருக்கு கொடுக்கப்படும் கிஃப்டுகளும் கூட விலையுயர்ந்த சொகுசு கார்கள் தான். அப்படி இருக்கையில், பல கோடிகளை வருமானமாக ஈட்டி வரும் எடல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு சிஇஓ ஆன ராதிகா குப்தா இன்று வரை ஒரு சொகுசு கார் கூட சொந்தமாக வாங்கியதில்லையாம். தன்னால் வாங்க முடிந்தும் ஏன் வாங்கவில்லை என்பதற்கு அவர் விளக்கமளித்துள்ளார்.
ராதிகா குப்தா சமீபத்தில் சொகுசு கார்களை வாங்கும் திறன் இருந்தும் தன்னிடம் ஏன் இல்லை என்பது குறித்து ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியுள்ளார்.கடந்த இரண்டு தசாப்தங்களாக பணம் அதிகம் சம்பாதித்தும் அதன் மூலம் வளர்ச்சியடைந்ததை பற்றி பேசிய ராதிகா குப்தா, பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் பட்டம் பெற்றபோது மக்கள் ஓ! உங்களிடம் ஆடம்பரமான ஹேண்டுபேக் கூட இல்லையா? என்று கேள்வி கேட்டுள்ளதாகவும், அப்போது நான் பாதுகாப்பற்றதாகவும், தலைகுனிவாகவும் கருதியாக கூறியுள்ளார். ஆனால், இப்போது யாராவது சொன்னால் தனக்கு விலையுயர்ந்த கார்கள் பிடிக்கவில்லை என்பதல்ல, ஆனால் அவை தேய்மானம் அடையும் சொத்து எதற்கு என கேட்பதாகவும் கூறியுள்ளார்.

குப்தாவிடம் தற்போது இன்னோவா கார் உள்ளது. நடுத்தரக் குடும்பத்தில் வளர்ந்து வரும்போது தன்னிடம் ஆடம்பரமான, டிசைனர் பொருட்கள் இல்லாவிட்டால் பாதுகாப்பற்றதாக உணர்ந்ததாகவும், ஆனால் இப்போது, நாட்டின் இளம் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக, நிரூபிக்க வேண்டியதில்லை என்று கூறியுள்ளார். விலையுயர்ந்த ஆடம்பர பொருட்களை வாங்குவதன் மூலம் மற்றவர்களுக்கு தனது மதிப்பை காண்பிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் நான் 'போனஸ் பெறுவேன். ஆடம்பரமான கார் வாங்க முடியும். ஆனால் நான் நினைக்கிறேன் கார் ஒரு தேய்மான சொத்து நான் ஓட்டுவதில்லை, அதை வீட்டை விட்டு வெளியே எடுத்தாலே தேய்மானத்துடன் 30 சதவீதம் மதிப்பு போய்விடும் என்று தனக்குள்ளே கூறிகொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக பணத்துடனான தனது உறவைப் பற்றி மேலும் விவரித்த அவர், பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் கல்லூரியில் பட்டம் பெற்றபோது, மக்கள் தன்னிடம் ஓ! உங்களிடம் ஆடம்பரமான கைப்பை இல்லையா? என கேட்டதாகவும், இப்போது, ஏன் இன்னோவா ஓட்டுகிறீர்கள்? கேட்பதாகவும், அவர்களிடம் மை ப்ளேஸ் மை லைஃப் என்று நான் சொல்லக்கூடிய கட்டத்தில் இருப்பதாகவும், மற்றவர்களிடம் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, எடல்வைஸ் சிஇஓ ராதிகா குப்தாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 41 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications