இந்தியாவில் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால், அதிகளவிலான எண்ணெய்யை வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதி செய்து வருகிறோம். ஆனால் தற்போது உலக நாடுகளிலும் சமையல் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ரீடைல் சந்தையில் சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக க்ரூட் பாமாயில் மீதான இறக்குமதி வரியைக் குறைத்துள்ளது மத்திய அரசு.
மத்திய மறைமுக மற்றும் சுங்க வரித் துறை
செவ்வாய்க்கிழமை மாலையில் மத்திய அரசு ஒப்புதல் அடிப்படையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் க்ரூட் பாமாயில் மீதான சுங்க வரியை 10 சதவீதமாகவும், ரீபைண்ட் பாமாயில் 37.5 சதவீதமாகவும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சமையில் எண்ணெய் மீதான வரி
இதன் மூலம் புதன்கிழமை முதல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டும் சமையில் எண்ணெய் மீதான வரி, செஸ் மற்றும் இதர கட்டணங்கள் அனைத்தையும் சேர்த்து க்ரூட் பாமாயில் மீதான வரி 30.25 சதவீதமாகவும், ரீபைண்ட் பாமாயில் மீதான வரி 41.25 சதவீதமாக இருக்கும்.
செப்டம்பர் 30 வரை
இப்புதிய வரி ஜூன் 30, 2021 முதல் செப்டம்பர் 30, 2021 வரையில் நடைமுறையில் இருக்கும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பழைய வரி அளவீடு
இதற்கு முன்பு க்ரூட் பாமாயில் மீது 15 சதவீதம் அடிப்படை சுங்க வரி இருந்த காரணத்தாலும் சுமார் 35.75 சதவீதம் வரி மொத்தமாக விதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது புதிய தளர்வுகள் மூலம் இந்த வரி அளவீடு 30.25 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான வரி 49.50 சதவீத வரியில் இருந்து 41.25 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சாமானிய மக்களுக்கு நன்மை
இந்த வரிக் குறைப்பு மூலம் கட்டாயம் ரீடைல் சந்தையில் சமையல் எண்ணெய் விலை கணிசமாகக் குறையும். இதனால் சாமானிய மக்கள் எண்ணெய்-க்காகச் செலவிடும் பணத்தை கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.
பெட்ரோல், டீசல் விலை
இதே வரிக் குறைப்பைத் தான் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் பெட்ரோல், டீசல் விலையிலும் கேட்கிறார்கள். இந்தியாவில் கிட்டதட்ட தினமும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையைக் கட்டுப்படுத்த மத்திய நிதியமைச்சகம் கலால் வரியைக் குறைக்க நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications