எட்டெக் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான Unacademy நிறுவனத்தில் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. SoftBank நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கும் இந்நிறுவனம், தனது செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும், செலவுகளைக் குறைப்பதற்காகவும் 250 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Unacademy-ன் உயர்மட்ட நிர்வாகம் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் லாபத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 வருடமாகக் கூகுள் முதல் Unacademy வரையில் யார் பணிநீக்கம் செய்தாலும் இதே காரணத்தைத் தான் முன் வைக்கின்றனர்.

தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்களில், சுமார் 100 பேர் பிஸ்னஸ் டெவலப்மென்ட் மற்றும் மார்கெட்டிங் போன்ற முக்கிய துறைகளில் பணிபுரிந்து வந்தவர்கள். மீதமுள்ள பணியாளர்கள் சேல்ஸ் துறையைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்த பணிநீக்கம், Unacademy நிறுவனத்தில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மோசமான நிதிநெருக்கடி சூழ்நிலையை உறுதிப்படுத்துகிறது. இந்த பணிநீக்கம் குறித்து Unacademy அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும் அதன் முக்கிய முதலீட்டாளர்களான Peak XV Partners மற்றும் General Atlantic ஆகியவை இதை உறுதி செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 2023 இல், 12% பணியாளர்களைக் குறைக்கும் வகையில் இரண்டாவது பெரிய பணி நீக்கத்தை இந்நிறுவனம் மேற்கொண்டது. இதற்கு முன்னதாக, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், சுமார் 1000 ஒப்பந்த மற்றும் முழுநேர பணியாளர்களை Unacademy நிறுவனம் பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம், நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ஹேமேஷ் சிங் பதவி விலகி, ஆலோசகர் பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
Unacademy நிறுவனத்தின் இந்த தொடர் பணிநீக்கங்கள், நிதி நெருக்கடி குறித்த தகவல்களைப் பார்க்கும் போது பைஜூஸ் நிறுவனத்தின் மோசமான நிலை நினைவுக்கு வருகிறது. எட்டெக் துறையில் நிலவும் கடுமையான போட்டி காரணமாகவும், தொடர் வர்த்தகம் மற்றும் வருவாய் இழப்பு காரணமாக ஒவ்வொரு நிறுவனமாக இதில் மாட்டிக்கொண்டு வருகிறது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications