நடப்பு நிதியாண்டின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் சில சீர்திருத்தங்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டை எதிர்பார்த்து கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள் காத்திருக்கின்றனர். கல்வியை மிகவும் மலிவாகவும் எளிதாக சாமானிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் மாற்றுவதற்கும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
கிண்டர் கார்ட்டன் முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்வி முறை, மாணவர்களின் அடிப்படை கல்வியை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்த அடிப்படை கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைப் பலர் எதிர்பார்க்கின்றனர்.

பர்லிங்டன் இங்கிலீஷ் நிறுவனத்தின் இயக்குநர் அமித் பவேஜா கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு 13 சதவீதம் பட்ஜெட் அதிகரிப்பு கிடைத்ததைக் குறிப்பிட்டு, இதனை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக கிண்டர் கார்ட்டன் முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான கல்வி முறையை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், தேர்வுகளை மதிப்பீடு செய்யும் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு GST விலக்கு: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள BPL மற்றும் குறைந்த வருமானம் கொண்ட LIG குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான கல்விச் செலவுகளில் GST விலக்குகள் தேவை என்றும் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எட்-டெக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பிரதீக் மகேஷ்வரி இது குறித்து கூறுகையில், "வறுமைக்கோட்டுக்கு கீழ் மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விச் செலவுகளில் 100 சதவீத GST விலக்கு அவசியம். அனால் தற்போது கல்வி செலவுகளுக்கு 18 சதவீதம் GST வரி விதிக்கப்படுகிறது.
இது மிக மிக அதிகம். எனவே, தரமான கல்வியை மலிவாகக் கிடைக்கச் செய்யவும், மாணவர் தங்கும் விடுதிகள் போன்றவற்றுக்கான GST விலக்குகளில் உள்ள குழப்பங்களை நீக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சமீப ஆண்டுகளில், வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இதுபோன்ற மாணவர்களுக்கு கல்விச் செலவுகளை குறைத்து மற்றும் எளிதாக கல்வி கடன் பெறுவது போன்றவற்றை செய்வதன் மூலம் பல மாணவர்களின் கனவு நினைவாகும்.
கல்வித் துறையில் GST வரி பற்றிப் பேசுகையில், ஃபின்ட்ராம் குளோபலின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாகப் பங்குதாரரான பங்கஜ் திங்ரா, சர்வதேச நாடுகளில் படிப்பதற்கான கல்விக் கடன்களுக்கான எளிதான கடன் வசதி, தகுதி சான்று பெற்ற நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதாகவும், இந்த நடவடிக்கைகள் உலகளாவிய கல்வியை மிகவும் மலிவாக மாற்றும் மற்றும் மிகவும் திறமையான பணியாளர்களை உருவாக்க உதவும், என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய கல்வித்துறையின் எதிர்காலம் சிறப்பாக அமைய, 2024-2025 பட்ஜெட்டில் கல்விக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும் என கல்வி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. குறிப்பாக, கல்விக் கட்டணக் குறைப்பு, டிஜிட்டல் கல்வி முறை மேம்பாடு, சர்வதேச கல்விக்கான ஆதரவு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
NEET தொடர்பான அறிவிப்புகள்: நீட் தேர்வு இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான முதன்மை தேர்வாக உள்ளது. இந்த தேர்வு பலருக்கு ஆதரவாக இருந்தாலும், பலருக்கு இந்த தேர்வில் அந்த அளவுக்கு உடன்பாடு இல்லை. எனவே 2024-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நீட் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுமா? பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமா? என்பது குறித்த எதிர்பார்ப்புகளும் எழுந்து உள்ளன. மருத்துவ கல்லூரி கட்டணத்தை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் அரசு எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளுக்கு பதில் கிடைக்குமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications