கலிபோர்னியா: ஒரு பில்லியனர் ஆவதற்கு உத்தரவாதம் அளிக்கும் குறிப்பிட்ட பள்ளி அல்லது படிப்பு என்றெல்லாம் எதுவும் இல்லை. ஆனால் நம்மில் பலருக்கு பில்லியனர்களுடைய பர்சனல் விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அந்த வகையில் பில்லியனர்கள் படித்த படிப்பை தெரிந்து கொள்ளவும் சிலர் விரும்புவார்கள். தற்போது ஒரு பெரிய பணக்கார சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி இருக்கும் தலைவர்களின் படிப்பை விளக்குகிறது இந்தப் பதிவு.
எலான் மஸ்க்: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி உலகின் மிகப் பெரிய பணக்காரராக எலான் மஸ்க் உள்ளார். அவர் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இருக்கிறார். எக்ஸ் கார்ப் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களும் இவருக்குச் சொந்தமானவையே.

மஸ்க் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் கலைகளில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அதற்கு முன்பு அவர் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். அறிவியலில் ஆய்வுகள் செய்து Ph.D பட்டம் பெற கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் அங்கு அவர் படிப்பைத் தொடரவில்லை.
பெர்னார்ட் அர்னால்ட்: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் படி, பெர்னார்ட் அர்னால்ட் உலகின் இரண்டாவது பணக்காரர் என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார். இவரின் நிகர மதிப்பு $228.8 பில்லியன் ஆகும்.
அர்னால்ட், 'லைசி மேக்சென்ஸ் வான் டெர் மீர்ச்' மற்றும் 'லைசி ஃபைதர்பே' ஆகியவற்றில் கல்வி பயின்றார். அதன் பின் 1971ஆம் ஆண்டு, பிரான்சின் முன்னணி பொறியியல் பள்ளியான எகோல் பாலிடெக்னிக்கில் பட்டம் பெற்றார்.
ஜெப் பெசோஸ்: அமேசான் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெப் பெசோஸ், $ 153 பில்லியன் டாலர், சொத்து மதிப்புடன் உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருக்கிறார்.
அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகளைப் படித்தார்.
லாரி எலிசன்: லாரன்ஸ் ஜோசப் எலிசன் ஆரக்கிளின் இணை நிறுவனர், CTO மற்றும் தலைவர் ஆவார். இவர் $149 பில்லியன் டாலர், சொத்து மதிப்புள்ளவர்.
சிகாகோவில் வளர்ந்த எலிசன் அர்பானா-சாம்பெயினில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்தார். ஆனால் அதற்குப் பின், அவரது வளர்ப்புத் தாயின் மறைவு காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானார். மீண்டும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தபோது ஒரே ஒரு செமஸ்டருடன் படிப்பை நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
பில் கேட்ஸ்: உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸ், கல்லூரி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தியவர். இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை உருவாக்கியவர் ஆவார். பில் கேட்ஸ்-இன் நிகர சொத்து மதிப்பு $134 பில்லியன் எனக் கூறப்படுகிறது.
வாரன் பபெட்: வாரன் பபெட், சுமார் $114 பில்லியன் நிகர மதிப்புடன் ஆறாவது பணக்காரர் என்னும் இடத்தைப் பிடிக்கிறார். அவர் 'Berkshire Hathaway' இன் தலைவர் மற்றும் CEO ஆவார். இவர் இளங்கலை அறிவியல் படிப்பை நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் வாரன் பபெட் கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் சேர்ந்து பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு நியூயார்க்கில் உள்ள நிதி நிறுவனத்தில் சேர்ந்தார்.
ஸ்டீவ் பால்மர்: ஸ்டீவ் பால்மர் லாஸ் ஏஞ்சல்ஸ் கிளிப்பர்ஸ் என்ற கூடைப்பந்து அணிக்கு சொந்தமானவர் ஆவார். இவர் 2000 முதல் 2014ஆம் ஆண்டு வரை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ஸ்டீவ் பால்மர்-இன் நிகர சொத்து மதிப்பு $104 பில்லியன் எனக் கூறப்படுகிறது
1973 இல், அவர் லாரன்ஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பை தொடர்ந்தார். மேலும் பால்மர் SAT கணிதப் பிரிவில் 800 மதிப்பெண்கள் பெற்றார் மற்றும் தேசிய மெரிட் ஸ்காலராக இருந்தார்.
இந்தப் பதிவை கூர்ந்து பார்த்தால் ஒரு விஷயம் நமக்கு புரியும். அது, என்னவென்றால் இது போன்ற பணக்கார பட்டியலில் உள்ள பாதி பேர் படிப்பை பாதியிலேயே விட்டவர்கள். சாதிக்க படிப்பு தேவையில்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications