இந்திய கோதுமையை இறக்குமதி செய்யும் எகிப்து: எத்தனை லட்சம் டன்கள் தெரியுமா?

இந்தியாவில் இருந்து 1,80,000 டன்கள் கோதுமையை இறக்குமதி செய்ய எகிப்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இது முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவை குறைவான இறக்குமதி அளவு என்று கூறப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான எகிப்து உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போருக்கு முன்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கோதுமை இறக்குமதி செய்தது.

கோதுமை இறக்குமதி

கோதுமை இறக்குமதி

ஆனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக எகிப்தின் கோதுமை இறக்குமதி சீர்குலைத்தது. அதுமட்டுமின்றி இறக்குமதிக்கான செலவு பல மடங்கு உயர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எகிப்து மக்கள் தொகை

எகிப்து மக்கள் தொகை

எகிப்து நாட்டில் 103 மில்லியன் மக்கள் தொகையில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கோதுமை ரொட்டி தான் சாப்பிடுவார்கள் என்பதால் இறக்குமதி செய்யப்படும் கோதுமையை மட்டுமே அந்நாடு நம்பியுள்ளது.

5 லட்சம் டன் கோதுமை

5 லட்சம் டன் கோதுமை

இந்நிலையில் எகிப்து உணவு வழங்கல் அமைச்சர் அலி மோசெல்ஹி என்பவர் கடந்த மே மாதம் இந்தியாவிடமிருந்து 5 லட்சம் டன் கோதுமையை இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டதாக கூறினார். ஆனால் அதே மாதத்தில் தான் கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தால் எகிப்துக்கு மற்ற நாடுகளிலிருந்தும் கோதுமையை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

1,80,000 டன் கோதுமை

1,80,000 டன் கோதுமை

இந்த நிலையில் அமைச்சர் அலி மோசெல்ஹி கூறியபோது, 'நாங்கள் 5 லட்சம் டன் இறக்குமதி செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். ஆனால் தற்போது 1,80,000 டன்கள் மட்டுமே இறக்குமதி செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேலும் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.

கோதுமையுடன் உருளைக்கிழங்கு

கோதுமையுடன் உருளைக்கிழங்கு

கோதுமையின் தேவையை குறைக்க கோதுமை மாவுடன் உருளைக்கிழங்கு சேர்க்கும் ஆலோசனையை பொதுமக்களுக்கு நாங்கள் தெரிவித்து வருகிறோம் என்றும் இதுகுறித்து தொழில்நுட்பத்தையும் ஆலோசனை செய்து வருகிறோம் என்றும் அமைச்சர் அலி மோசெல்ஹி கூறினார்.

உள்நாட்டில் கோதுமை உற்பத்தி

உள்நாட்டில் கோதுமை உற்பத்தி

எகிப்து நாடு உள்ளூரில் 3.9 மில்லியன் டன்கள் விவசாயிகளிடமிருந்து கோதுமையை கொள்முதல் செய்த போதிலும் கோதுமை பற்றாக்குறையால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+