வணிக வாகன நிறுவனமான ஈச்சர் மோட்டார்ஸ் கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், 40 சதவீதம் லாபத்தினை கண்டுள்ள நிலையில் கூட 52 வார உச்சத்தினை தொட்டுள்ளது.
இன்று மட்டும் அதன் பங்கு விலையானது 8.98 சதவீதம் ஏற்றம் கண்டு, 2,565 ரூபாயாக வர்த்தகமாகியுள்ளது. இதன் முந்தைய நாள் முடிவு விலையானது 2,353 ரூபாயாக காணப்பட்டது.
ஈச்சர் மோடார்ஸ் பங்கு விலை 4.82 சதவீதம் குறைந்து, 2,240 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. லார்ஜ் கேப் பங்கானது, கடந்த 9 நாட்களில் 23.89 சதவீதம் ஏற்றம் கண்டுள்ளது.

அதோடு இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்க்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இதற்கிடையில் இந்த ஆட்டோமொபைல் பங்கின் விலையானது ஒரு ஆண்டில் 18.12 சதவீதம் ஏற்றத்திலும், இதே நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்து 12 சதவீதம் ஏற்றத்திலும் காணப்படுகிறது.
இந்த நிலையில் பிஎஸ்இ சந்தையில் 2.91 லட்சம் பங்குகள் கைமாறியதாகவும், இதன் மூலம் பிஎஸ்இ சந்தையில் 68,902 கோடி ரூபாயாக அதன் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் பிசினஸ் டுடே செய்தியில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் சந்தை முடிவில் இந்த பங்கின் விலையானது 7.15 சதவீதம் அல்லது 168 ரூபாய் அதிகரித்து 2,521 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் 40 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 343.34 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் 572.69 கோடி ரூபாயாக லாபம் கண்டிருந்தது.
இதே செயல்பாட்டு வருவாய் செப்டம்பர் காலாண்டில் 2,133.60 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் 2,192.47 கோடி ரூபாயாக வருவாய் கண்டிருந்தது கவனிக்கதக்கது.
இந்த இரண்டாவது காலாண்டில் ராயல் எண்பீல்டு பைக் 1,49,120 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 9% குறைந்துள்ளதாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications