ஏராளமான இந்தியப் பணக்காரர்களின் மகள்கள், மகன்கள், குடும்பத்தார் வெளிநாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். இந்தியாவில் வளர்க்கப்பட்டு படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்று பின்னர் அங்கேயே குடியேறி விடுகின்றனர். அப்படி ஒருவர் தான் ஈஷா பார்தி பாஸ்ரிச்சா.
இந்தியத் தொழிலதிபர் சுனில் மிட்டலின் 37 வயதான மகள் அவர். பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் சுனில் மிட்டல். டெலிகாம் துறையில் அவர் மிகப் பெரிய பணக்காரர். அவரது சொத்து மதிப்பு ரூ.78360 கோடி ஆகும்.

அவரது மகள் பாஸ்ரிச்சா ஒரு லைப்ஸ்டைல் முதலீட்டாளர். லண்டன் மெம்பர்ஸ் கிளப் மேய்சன் எஸ்டேடிலின் ஆர்டிஸ்டிக் டைரக்டர் ஆவார். அவரது கணவர் ஷரண் பாஸ்ரிச்சாவுடன் அவர் லண்டனில் வசிக்கிறார். லைப்ஸ்டைல் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனமான என்னிஸ்மோரின் நிறுவனர் ஷரண் பாஸ்ரிச்சா.
தம்பதியருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
ஈஷா ஸ்காட்லாந்தில் பிறந்து புதுதில்லியில் வளர்க்கப்பட்டார். ஈஷா தனது பிள்ளைப் பிராயத்தை பெரும்பாலும் ஸ்காட்லாந்தில் கழித்தார். இங்கிலாந்தில் உள்ள பாத் பல்கலைக்கழகத்தில் அரசியல், இத்தாலியன் மற்றும் பிரஞ்சு ஆகிய மொழிகளில் ஈஷா பட்டம் பெற்றார்.
ஒரு முதலீட்டாளராக அவர் ரோக்சாண்டா, ஆஸ்சினோ, டாக்டர் பார்பரா ஸ்டர்ம் போன்ற பிராண்டுகளில் முதலீடுகளை செய்துள்ளார். ஈஷா ஜார்ஜ் டவுண்ஹவுஸில் மேய்சன் எஸ்டேல்லே என்ற நிறுவனத்தின் ஒரு சொகுசு பங்களாவை வைத்துள்ளார்.
பார்தி பவுண்டேஷனின் நிர்வாக குழுவில் ஈஷா உறுப்பினராகவும் உள்ளார். லூயிஸ் உய்ட்டனில் விற்பனை உதவியாளராக பாரிஸில் ஒரு வருடம் கழித்தார். அவரது கணவர் ஷரன் பாரிஸ்ச்சா என்னிஸ்மோரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார், இது 2015 இல் ஸ்காட்லாந்தில் உள்ள பிரபலமான க்ளெனேகிள்ஸ் சொகுசு ஹோட்டலை வாங்கியது.
அவர் ஒரு வாழ்க்கை முறை முதலீட்டாளராக இருப்பதால், சமூக ஊடகங்களிலும் செயலில் உள்ளார். அவர் 28.9K பின்தொடர்பவர்களைக் கொண்ட தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் அடிக்கடி வாழ்க்கை அப்டேட்களை பகிர்ந்து கொள்கிறார்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications