டெல்லி : ஒட்டுமொத்த பொருளாதாரமும் மந்த நிலையில் இருக்கும் இந்த நிலையில், இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 5.2 சதவிகிதமாக கடந்த செப்டம்பர் மாதத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது.
அதென்ன முக்கிய எட்டு துறைகள் என்று கேட்கிறீர்களா? கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு துறை, பெட்ரோலிய சுத்திகரிப்பு, மற்றும் உரம் ஆகிய முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி தான் இது.

இந்த எட்டு துறைகளின் வளர்ச்சி சுமார் எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்றும், இது பொருளாதாரத்தில் நிலவி வரும் மந்த நிலையையே காட்டுகிறது என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் கடந்த 2018 செப்டம்பரில் இந்த முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி 4.3 சதவிகிதமாக வளர்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் முக்கிய எட்டு துறைகளில் 7 துறைகளின் வளர்ச்சி கடும் சரிவைக் கண்டதே இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2019ல் எட்டு முக்கிய துறைகளின் மொத்த வளர்ச்சி 120.6 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த செப்டம்பர் 2018வுடன் ஒப்பிடும்போது 5.2 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே கடந்த ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான வளர்ச்சி 1.3 சதவிகிதம் மட்டுமே இருந்தது என்றும் அரசு ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக செப்டம்பர் 2019ல் நிலக்கரி உற்பத்தி 20.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே கச்சா எண்ணெய் உற்பத்தியும் 5.4 சதவிகிதம் குறைந்தும், இதே ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. இதே இயற்கை எரிவாயு உற்பத்தியானது 4.9 சதவிகிதம் குறைந்துள்ளது. இது ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 2 சதவிகிதம் சரிந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதே பெட்ரோலியம் சுத்திகரிப்பு 6.7 சதவிகிதம் குறைந்தும், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 2 சதவிகிதம் குறைந்தும் உள்ளது. மேலும் ஸ்டீல் உற்பத்தி 0.3%மும், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 8.5%மும் வீழ்ச்சி கண்டுள்ளது. இதே சிமெண்ட் உற்பத்தி 2.1% குறைந்தும், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 0.7% சரிந்தும் காணப்படுகிறது.
இதே மின்சார உற்பத்தி 3.7% குறைந்தும், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 3.6 சதவிகிதம் அதிகரித்தும் காணப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் வளர்ந்த ஒரே துறை அது உரத் தொழில் தான். கடந்த செப்டம்பரில் 5.4 சதவிகிதம் அதிகரித்தும், ஏப்ரல் - செப்டம்பர் வரையிலான காலத்தில் 1.1% அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications