டெல்லி: இந்தியாவின் முக்கிய எட்டு துறைகளின் வளர்ச்சி கடந்த ஏப்ரல் 2019-க்குப் பிந்தைய மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் 2020-ல் -38.1 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருக்கிறது. அதாவது 38 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.

1. கடந்த ஏப்ரல் 2020-ல் சிமெண்ட் 86 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 2.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
2. சிமெண்ட் துறையைத் தொடர்ந்து, இந்தியாவில் ஸ்டீல் துறை படு பாதாளத்தைத் தொட்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2020-ல் ஸ்டீல் துறை 83.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 13.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
3. அதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 2020-ல் சுத்திகரிப்பு பொருட்கள் துறை 24.2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 4.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
4. கடந்த ஏப்ரல் 2020-ல் மின்சாரத் துறை 22.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 5.9 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
5. கடந்த ஏப்ரல் 2020-ல் இயற்கை எரிவாயு துறை 19.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 0.8 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
6. கடந்த ஏப்ரல் 2020-ல் நிலக்கரி 15.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 3.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
7. கடந்த ஏப்ரல் 2020-ல் கச்சா எண்ணெய் 6.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 6.7 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
8. மொத்த எட்டு துறைகளில், மிகவும் குறைந்த அளவுக்கு மட்டுமே சரிவைக் கண்ட துறை என்றால் அது உரங்கள் தான். கடந்த ஏப்ரல் 2020-ல் உரத் துறை 4.5 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 4.4 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டு மொத்தமாக கடந்த ஏப்ரல் 2020-ல் எட்டு முக்கிய தொழில் துறைகளின் வளர்ச்சி 38.1 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது. கடந்த ஏப்ரல் 2019-ல் 5.2 சதவிகிதம் வளர்ச்சி கண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications