கொடுத்த லாபமெல்லாம் போச்சே.. 1 வாரத்தில் ரூ.1.80 லட்சம் கோடி இழப்பு.. டிசிஎஸ் டாப் லூசர்..!

கடந்த சில வாரங்களாகவே இந்திய சந்தையானது தொடர்ந்து வரலாற்று உச்சத்தை தொட்டு வந்த நிலையில், கடந்த வாரத்தில் தொடர்ந்து சரிவை கண்டு வந்தது.

இதற்கிடையில் கடந்த வாரத்தில் முதலீட்டாளர்கள் profit-booking செய்திருக்கலாம் என்ற நிலையில், இந்த சரிவினைக் கண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் தான் டாப் 10 நிறுவனங்களில் எட்டு நிறுவனங்களின் சந்தை மதிப்பானது. 1,80,534.34 கோடி ரூபாய் குறைந்துள்ளது.

சென்செக்ஸ் வீழ்ச்சி

சென்செக்ஸ் வீழ்ச்சி

இதே கடந்த வாரத்தில் தொடர்ச்சியாக 4வது நாட்கள் சரிவினைக் கண்ட நிலையில், சென்செக்ஸ் 1282.89 புள்ளிகள் குறைந்து அல்லது 2.13% குறைந்துள்ளது.

இதனையடுத்து பல நிறுவனங்களின் பங்கு விலையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இதனால் அன்னிய முதலீடுகளும் வெளியேறிய நிலையில் சந்தையானது சரிவினைக் கண்டது.

டிசிஎஸ் சந்தை மூலதனம்

டிசிஎஸ் சந்தை மூலதனம்

குறிப்பாக நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், அதன் சந்தை மூலதனத்தில் 52,526.53 கோடி ரூபாய் குறைந்து 13,79,487.23 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை ஆனது 1.20 சதவிகிதம் குறைந்து, 3730.20 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ் மூலதனம்

இன்ஃபோசிஸ் மூலதனம்

இதுவே மற்றொரு முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 41,782.4 கோடி ரூபாய் குறைந்து, 7,06,249.74 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
கடந்த அமர்வில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.60% குறைந்து 1665.15 ரூபாயாக சரிவில் முடிவடைந்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம்

ஹெச்டிஎஃப்சி சந்தை மூலதனம்

இதே தனியார் முன்னணி நிறுவனமான நிதி நிறுவனமான ஹெச்டிஎஃப்சி நிறுவனத்தின் சந்தை மூலதனமாக 22643.11 கோடி ரூபாய் குறைந்தது, 4,90,430.74 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.55% குறைந்து 2711.65 ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம்

ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனமானது 21,095.11 கோடி ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது. இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது 1.21 சதவிகிதம் குறைந்து, 692.35 ரூபாயாக சரிவடைந்து முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ் மூலதனம்

பஜாஜ் பைனான்ஸ் மூலதனம்

இதே தனியார் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனமானது, 16,438.9 கோடி ரூபாய் குறைந்து, 4,54,026.68 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கிடையில் இவ்வங்கியின் பங்கு விலையானது, 1.90% குறைந்து, 7,522.75 ரூபாயாக குறைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் சந்தை மூலதனம்

ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 9,222.14 கோடி ரூபாய் குறைந்து, 6,34,977.04 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று சற்று அதிகரித்து 2,704.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி

கோடக் மகேந்திரா வங்கி

இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பு 6,415.08 கோடி ரூபாய் குறைந்து, 3,95,563.67 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இந்த வங்கியின் பங்கு விலையானது கடந்த வெள்ளிக்கிழமை என்ற அளவில் சற்றே குறைந்து 1993.55 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

டாப் கெயினர் ரிலையன்ஸ்

டாப் கெயினர் ரிலையன்ஸ்

எனினும் இந்த சந்தை அமர்வில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தையின் மூலதனம் ஆனது 25,294.38 கோடி ரூபாய் அதிகரித்து, 15,99,346.41 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 0.18% அதிகரித்து, 2,523.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எஸ்பிஐ சந்தை மதிப்பு

எஸ்பிஐ சந்தை மதிப்பு

இது நாட்டின் முன்னணி பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ சந்தை மதிப்பானது 9773.33 கோடி ரூபாய் அதிகரித்து, 4,03,169.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது, இதற்கிடையில் இந்த வங்கியின் பங்கு விலையானது சற்று குறைந்தும் 451.65 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+