மோடி சொன்ன குட்நியூஸ்.. 8வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல்.. கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 8வது சம்பள கமிஷன் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது. 1 கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களது அடிப்படை சம்பளம், கொடுப்பனவு, ஓய்வூதியங்கள் மற்றும் பிற சலுகைகள் எப்போது உயரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் இந்த முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை அறிவித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த 8வது சம்பள கமிஷன் அமைக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். இதேவேளையில் ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மோடி சொன்ன குட்நியூஸ்.. 8வது சம்பள கமிஷனுக்கு ஒப்புதல்.. கோடிக்கணக்கான அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்!

8வது ஊதியக் குழுவின் உறுப்பினர்களை நியமிப்பது உள்ளிட்ட குழுவின் அமைப்பு மற்றும் அதிகாரம் குறித்த கூடுதல் விவரங்களை அரசு விரைவில் வெளியிடும் எனத் தெரிகிறது.

2016 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 7வது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்தது, இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தில் குறைந்தபட்ச தொகையை ரூ.7,000-லிருந்து ரூ. 18,000 ஆகவும், உயர் அதிகாரிகளின் அதிகபட்ச சம்பளத்தை 2.5 லட்சம் ரூபாய் வரையிலும் உயர்த்தியது.

பொதுவாக, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒரு புதிய சம்பள கமிஷன் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும். இந்த காலவரையை வைத்துப் பார்க்கும் போது, 8வது சம்பள கமிஷன் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர வேண்டும்.

2014 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அமைக்கப்பட்டது 7வது சம்பள கமிஷன், தற்போது 8வது சம்பள கமிஷன் நடைமுறைப்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படும். குறிப்பாக மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம், கொடுப்பனவு மற்றும் பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியங்கள் ஆகியவை உயர்வடையும்.

நாட்டில் நிலவும் பணவீக்கம், பொருளாதார நிலைமைகள் மற்றும் லிவ்விங் காஸ்ட் போன்ற பல்வேறு காரணிகளை இந்த சம்பள குழுக்கள் ஆய்வு செய்து அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளை வழங்கும், அதன் அடிப்படையில் மத்திய அரசும், மத்திய நிதியமைச்சகமும் முடிவுகளை எடுக்கும்.

இந்தக் குழுவின் பரிந்துரைகளில் ஊதியங்கள் மற்றும் தற்போதைய ஊழியர்களுக்கான அகவிலைப்படியும் (DA), ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணமும் (DR) உள்ளிட்ட கொடுப்பனவும் மாறுபடும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+