டாமினோஸ் பீட்சா மற்றும் டன்கின் டோநட்ஸ் ஆகிய பிராண்டுகளின் இந்திய வர்த்தகத்தின் தாய் நிறுவனமான ஜுபிலியன்ட் புட்வொர்ஸ், அதிகளவிலான வாடிக்கையாளர்களை அடைய வேண்டும் என்ற நோக்கில், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமான உணவாக விளங்கும் பிரியாணி-ஐ விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இதற்காக ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் இந்தியா முழுவதும் பிரியாணி விற்பனை செய்யப் புதிதாக Ekdum! என்ற பிராண்ட்-ஐ உருவாக்கியுள்ளது.
ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் பங்குகள்
இந்திய மக்களுக்குப் பிரியாணி மீது இருக்கும் காதலும், முதலீட்டாளர்களுக்கு ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக இன்றைய அறிவிப்பின் மூலம் இன்றைய வர்த்தகத்தில் ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் பங்கு மதிப்பு அதிகப்படியாக 7.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 2,924 ரூபாய் விலையை அடைந்து 52 வார உயர்வைப் பதிவு செய்துள்ளது
பல சுவையில் பிரியாணி
ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் Ekdum! என்ற பிராண்ட் கீழ் ஹைதராபாத் நிஜாமி பிரியாணி, லக்னோவி நவாபி பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி, கொல்கத்தா பிரியாணி, பட்டர் சிக்கன் பிரியாணி, முட்டை பிரியாணி, பன்னீர் மக்னி பிரியாணி, மற்றும் தவா சிக்கன் பிரியாணி ஆகிய வகைகளில் பிரியாணியை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர் எண்ணிக்கை
மேலும் ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் அனைத்துத் தரப்பு மக்களையும் தனது வாடிக்கையாளராக இருக்க வேண்டும் என்ற திட்டத்துடன் Ekdum பிரியாணியைத் துவக்க விலையாக 99 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்ய உள்ளது.
ஜுபிலியன்ட் புட்வொர்ஸ்
எங்களது விலை மற்றும் தரத்தின் மூலம் இந்திய உணவு சந்தையில் முக்கியமான இடத்தைக் கண்டிப்பாகப் பிடிப்போம் என ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் நிறுவனத்தின் தலைவர்களான ஷியாம் எஸ் பார்தியா, ஹரி எஸ் பார்தியா தெரிவித்துள்ளனர்.
டாமினோஸ் விடவும் அதிக வர்த்தகம்
Ekdum பிரியாணி 99 ரூபாய் என்ற குறைவாக விலையில் இருக்கும் காரணத்தாலும், பிரியாணியை விரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் காரணத்தாலும் டாமினோஸ் பீட்சா வர்த்தகத்தை விடவும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பிரியாணி மூலம் பெற முடியும் என ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் நிர்வாகம் நம்புகிறது.
பிரியாணி சுவை
இதேபோல் இந்தியா முழுவதும் டாமினோஸ் பீட்சா சுவை ஓரே மாதிரி இருப்பது போல் பிரியாணியின் சுவையும் ஓரே மாதிரி இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது ஜுபிலியன்ட் புட்வொர்ஸ்.
பிரியாணிக்கு வர்த்தகப் போட்டி
ஜுபிலியன்ட் புட்வொர்ஸ் நிறுவனம் பிரியாணி வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளதை அடுத்து பிரியாணி-கென பிரத்தியேகமாக இருக்கும் பிரியாணி பை கிலோ, பெஹ்ரோஸ் பிரியாணி, பிரியாணி ப்ளூஸ், ஹைதராபாத் பேரடைஸ் பிரியாணி, பாவார்சி பிரியாணி, திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ஆகிய நிறுவனங்கள் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications