ஊரெல்லம் Elcid Investment பங்குகள் பத்திதான் பேச்ச! 1 நாளில் 66,92,535% உயர்வதற்கு என்ன நடந்தது..?

இந்திய பங்குச் சந்தையில் மிகவும் விலையுயர்ந்த பங்கு எது என்று நீங்கள் நினைத்தால், அது எம்.ஆர்.எஃப் லிமிடெட்டின் பங்காக தான் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது, வரலாற்றை திருத்தியுள்ளது.

இன்றைய (செவ்வாய்க்கிழமை - அக்டோபர் 29) வர்த்தக நிலவரப்படி, ரூ.1.2 லட்சம் மதிப்புள்ள எம்.ஆர்.எஃப் பங்கை விட இரண்டு மடங்கு அதிக விலையில் கொண்ட ஒரு ஸ்மால்கேப் நிறுவனத்தின் பங்கு இந்தியாவின் விலை உயர்ந்த பங்கு என்ற அடையாளத்தை பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த பங்கு ஜூலை மாதத்தில் ரூ.3.21 மதிப்புள்ள பென்னி ஸ்டாக்காக இருந்தது என்பது தான்.

ஊரெல்லம் Elcid Investment பங்குகள் பத்திதான் பேச்ச! 1 நாளில் 66,92,535% உயர்வதற்கு என்ன நடந்தது..?

எல்சிட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற ஸ்மால்கேப் நிறுவனத்தின் பங்கு விலை வெறும் ரூ.3.53-லிருந்து ரூ.2,36,250 ஆக உயர்ந்துள்ளது. இதுவும் ஒரு நாளில் 66,92,535% உயர்ந்து ரூ.2,36,250 விலையை அடைந்து இந்திய பங்குச்சந்தை வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது. இதோடு எல்சிட் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த பங்காக மாறியுள்ளது.

இந்திய வரலாற்றில் இதுபோன்ற தடாலடி ஏற்றம் இதுவரையில் கேள்விப்படாத ஒன்று. இது 2021-ம் ஆண்டின் கிரிப்டோ அதிரடியில் பல மீம்காயின் இதுப்போன்று தடாலடியாக உயர்ந்ததை எல்சிட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் பங்குகளின் வளர்ச்சி நினைவூட்டுகிறது.

பங்குச்சந்தை அறிவிப்பு: இந்த அதிரடி ஏற்றம், பங்குச் சந்தைகள் BSE மற்றும் NSE ஆகியவை திங்கட்கிழமை நடத்திய முதலீட்டு ஹோல்டிங் நிறுவனங்களுக்கான சிறப்பு விலை கண்டுபிடிப்பு ஏலத்தின் விளைவாகும். இதுகுறித்து மும்பை பங்குச்சந்தை அக்டோபர் 21ஆம் தேதி அறிவிப்பை வெளியிட்டது.

முக்கிய நிறுவனங்கள்: இந்த சிறப்பு ஏலத்தில், எல்சிட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் உட்பட நல்வா சன்ஸ் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், டிவிஎஸ் ஹோல்டிங்ஸ், கல்யாணி இன்வெஸ்ட்மெண்ட் கம்பெனி, எஸ்.ஐ.எல் இன்வெஸ்ட்மெண்ட்ஸ், மகாராஷ்டிரா ஸ்கூட்டர்ஸ், ஜி.எஃப்.எல், ஹரியானா கேப்ஃபின் மற்றும் பிலானி இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் போன்ற நிறுவனங்களின் பங்குகளும் மீண்டும் மதிப்பிடப்பட்டு பட்டியலிடப்பட்டன.

என்ன காரணம்: இந்த சிறப்பு ஏலம், ஹோல்டிங் நிறுவனங்களின் தற்போதைய சந்தை மதிப்புக்கும் புத்தக மதிப்புக்கும் இடையிலான இடைவெளியை குறைக்க நடத்தப்பட்டது. இதுவரை குறைந்த விலையில் வர்த்தகமாகி வந்த இந்த நிறுவனங்களின் பங்குகள், இந்த ஏலத்தின் மூலம் உண்மையான மதிப்பைப் பெற்றன.

முதலீட்டு ஹோல்டிங் நிறுவனங்கள் என்றால் என்ன?: முதலீட்டு ஹோல்டிங் நிறுவனங்கள் (IHCs) என்பது பிற நிறுவனங்களின் பங்குகள் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கும் நிறுவனங்களாகும். அவை பங்குச் சந்தையின் முக்கிய பகுதியாகும்.

இந்த நிறுவனங்கள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்களில் கட்டுப்படுத்தும் பங்கை வைத்திருக்கும், ஆனால் நேரடியாக சேவைகள் வழங்கவோ அல்லது வணிகத்தில் ஈடுபடவோ செய்யாது. மேலும் இவை பிற நிறுவனங்களுக்கான உரிமை வாகனமாக அதாவது ownership vehicle ஆக செயல்படுகின்றன, மேலும் அவற்றின் முதன்மை நோக்கம் முதலீடுகளை நிர்வகித்து வைத்திருப்பது மட்டுமே.

தடாலடி உயர்வு: 2011-ம் ஆண்டு முதல் ரூ.3-க்கு வர்த்தகமாகி வந்த எல்சிட், அதன் புத்தக மதிப்பு ரூ.5,85,225-ஆக இருந்தது. 2011-ம் ஆண்டு முதல் எந்த வர்த்தகமும் நடைபெறாத நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலை எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. தற்போது பங்குச்சந்தையின் மறுமதிப்பீட்டின் காரணமாக இதன் விலை அப்டேட் ஆகியுள்ளது.

எல்சிட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆசியன் பெயிண்ட்ஸில் 1.28% பங்கை வைத்துள்ளது, அதன் பங்கு மதிப்பு ரூ.3,616 கோடி, இது எல்சிட்டின் மொத்த சந்தை மூலதனத்தில் 80% ஆகும். ரூ.2.3 லட்சத்துக்கு ஒரு பங்கு மதிப்பிடப்பட்டாலும், எல்சிட் அதன் புத்தக மதிப்பில் வெறும் வெறும் 0.38 என்ற அளவில் தான் வர்த்தகமாகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+