டெல்லி: சில நாட்களுக்கு முன்பு தான் டாடா குழுமத்தில் பதவி பிரச்சனை தலைவிரித்தாடிய நிலையில், தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்த நிலையில் சைரஸ் மிஸ்திரி தனது பதவி மீது எந்த ஆசையும் இல்லை. எனக்கு அநீதி கிடைத்தாக உணர்ந்தேன், ஆக எனக்கு நீதி வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வழக்கு தொடர்ந்தேன் என்றும் கூறியிருந்தார்.
இப்படி ஒரு நிகழ்வு மறையும் முன்னரே, சென்னையை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் முருகப்பா குழுமத்திலும் இப்பிரச்சனை தலை தூக்கியுள்ளது.
1900ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்தின் மதிப்பு 36,893 கோடி ரூபாயாகும். இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இது, சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு சுமார் 28 தொழில்களை நிர்வகித்து வருகிறது. சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறுகின்றது.
பதவி இல்லை என மறுப்பு
முருகப்பா குழுமத்தை சேர்ந்த முன்னாள் நிர்வாக தலைவரான எம்வி முருகப்பனின் மூத்த மகள் தான் வள்ளி அருணாச்சலம். முருகப்பா குழுமம் பங்கு வைத்திருக்கும் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனத்தில் பதவி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அருணாச்ச;லம், அவரது சகோதரி வெல்லாச்சி முருகப்பன், அவர்களது தாய் எம்வி வள்ளி முருகப்பன், ஆகியோர் இணைந்து அந்த நிறுவனத்தில் 8.15 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா வர திட்டம்
இந்த நிலையில் இந்த பிரச்சனையை எதிர்கொள்வதற்காக லண்டனில் இருந்து, இன்னும் சில நாட்களில் வள்ளி அருணாச்சலம் இந்தியா வர திட்டமிட்டுள்ளதாக நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் அவர் பதவிக்கு குழுவில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களையும் அணுகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆண் வாரிசுகள் மட்டுமே ஆதிக்கம்
மேலும் வள்ளி அருணாச்சலம் சமீபத்தில் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கையில், இந்த குழுவில் ஆண் வாரிசுகள் ஆதிக்கம் செலுத்துவதாக புகார் கூறியிருந்தார். மேலும் ஐந்து தலைமுறைகளாகவே ஆண் வாரிகளை மட்டுமே காண்பித்துள்ளது. இந்த நிலையில் எம்வி முருகப்பன் 2017ல் காலமான பிறகு அவரது தாயும் சகோதரியும் முதலீடுகளில் பங்குகளை கூட்டாகப் பெற்றனர்.
தொழில் அனுபவம் உள்ளது
மேலும் வள்ளி அருணாச்சலம் முன்னதாக ஒரு அறிக்கையில், நானும் என் சகோதரியும் நன்கு படித்தவர்கள் தான். எங்களுக்கு தொழிலில் பல வருட அனுபவம் உள்ளது. எங்கள் திறமைகளை நாங்கள் செயல்படுத்தவோ அல்லது குடும்ப வணிகத்திற்கு பொருந்தாது என்று கூற எந்த காரணமும் இல்லை என்றும் செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.
சட்ட ரீதியாக இம்முயற்சி தேர்ச்சி பெறாது
எந்தவொரு குழுவும் பாலினத்தை அடிப்படையில் நிலைகளை மறுக்க முடியாது என்று சட்ட வல்லுனர்கள் மறுக்க முடியாது. இது சட்ட சோதனையில் தேர்ச்சியும் பெறாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஐந்தாவது தலைமுறையில் இருக்கும் முருகப்பா குழுமம் 40,000 கோடி ரூபாய் மதிப்பிலான கூட்டு நிறுவனத்தை கட்டுப்படுத்துகிறது. இதில் பட்டியிலிடப்பட்ட நிறுவனங்களும் உள்ளன. ஆக இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்ட 28 வணிகங்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications