தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!

ஏப்ரல் 19 ஆம் தேதி துவங்க உள்ள பொது தேர்தல் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக விலையுயர்ந்த தேர்தலாக 2024 இந்திய பொது தேர்தல் விளங்குகிறது.

இந்த 120 லட்சம் கோடி ரூபாயில் சுமார் 20% பணத்தை தேர்தல் ஆணையம் செலவிடும், இது தேர்தல் நடத்துவதற்காக செலவிடப்படும். மீதமுள்ளவை பிரச்சார பொருட்கள், பயணம், உணவு மற்றும் இடையில் உள்ள அனைத்து சேவைகள், சரக்குகளுக்கு செலவிடப்படுகிறது.

தேர்தல் 2024: கொடி, பிளக்ஸ் பேனர்-க்கு மட்டும் ரூ.5000 கோடி செலவு.. அதிர்ச்சி அளிக்கும் டேட்டா..!!

இந்தியாவின் தேர்தல் பொருளாதாரம் வியக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தேர்தல் காலத்தில் எந்தெந்த பொருட்கள் அதிகம் விற்பனையாகின்றன, இந்த வரும் என்னவெல்லாம் புதிகாக சந்தைக்கு வந்துள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் எவ்வளவு பணம் புரளுகிறது..? என்பதை ஒரு ரவுண்ட் பார்ப்போம். தேர்தல் பிரச்சாரம் எல்லாம் முடிந்து ரோடு காலியாக இருக்கிறது, சோ, டிராபிக் தொல்லை இருக்காது. வாங்க போவோம்.

இந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகத்தின் திருவிழா போன்றது. கட்சிகளின் சின்னங்கள் மற்றும் வேட்பாளர்களின் முகங்களுடன் அச்சிடப்பட்ட பேனர்கள், நோட்டீஸ், சுவரோவியம், டிஜிட்டல் விளம்பரம், கொடிகள் என கட்சி, சின்னம், வேட்பாளர்கள் முகம் மக்கள் மனதில் பதியவைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அனைத்தையும் செய்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் பொதுவாகவே அதிகப்படியான மக்களை கவர வேண்டும் என்பதற்காக மிகக் குறைந்த விலையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள புதுப்புது ஐடியாக்கள் வருவது இயல்பு.

இந்த வகையில் இந்த வருடம் 5 ரூபாய் முதல் 20 ரூபாய் மதிப்பிலான பேட்ஜ், கொடியின் பின், பொம்பைகள், நினைவு பரிசுகள் என பலவற்றை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது, குறிப்பாக ஆன்லைன் தளங்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளன.

இத்தகைய பொருட்களை இந்தியா முழுவதும் தயாரிக்கப்படுகிறது ஆனால் வடக்கில் குஜராத் மாநிலம் மதுரா மற்றும் தெற்கில் ஹைதராபாத் போன்ற சில ஹாட் ஸ்பாட்களும் இதற்காகவே ஸ்பெஷலாக உள்ளன.

குஜராத் மாநிலம் மதுரா மற்றும் ஹைதராபாத்தில் இருப்பவரை அனைத்தும் ஆடைகளை உற்பத்தி செய்யும் வணிக மையங்கள் தான், ஆனால் தேர்தல் காலங்களில் கொடிகள் மற்றும் பதாகைகளை பெரிய அளவில் தயாரிக்க துவங்குகிறது.

சில தொழிற்சாலைகள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 10 லட்சம் கொடிகளை உற்பத்தி செய்கின்றன, 2019 ஆம் ஆண்டில் இருந்த வர்த்தகத்தை காட்டிலும் மிகப்பெரிய சந்தை இந்த ஆண்டு உருவாகியுள்ளது. சந்தை எவ்வளவு பெரியது என்று வணிக விற்பனை இந்த ஆண்டு சாதனையாக இருந்தது.

இது அனைத்து அரசியல் கட்சிகளாலும், குறிப்பாக ஆளும் பாஜக பரியா ஜனதா கட்சியாலும் கொடுக்கப்பட்ட ஆர்டர்கள் மூலம் 2019ஆம் ஆண்டு பொது தேர்தல் காட்டிலும் 30% அதிக வர்த்தகம் மெர்சன்டைஸ் பிரிவில் குவிந்துள்ளது என கணிக்கப்படுகிறது.

இ-காமர்ஸ் தளங்களிலும் கொடிகள் முதல் பதக்க பேனாக்கள் மற்றும் காஃபி கப் வரை தேர்தல் பிரச்சாரம் சார்ந்த பொருட்கள் விற்கப்படுகின்றன. இதற்கு முன்பு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கு மட்டுமே டிமான்ட் இருந்த நிலையில், இப்போது பிராந்திய கட்சிகள் சார்ந்த பொருட்களுக்கும் ஆன்லைனில் டிமாண்ட் அதிகரித்துள்ளது.

இந்த வருடம் ஆன்லைனில் போனா, கப் ஆகியவற்றை தாண்டி கடிகாரங்கள், தீபம், wind chimes, dream catchers கூட கட்சி சின்னங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.

இப்படி அரசியல் கட்சிகள் பல்வேறு விளம்பர பொருட்களுக்கு எவ்வளவு பணம் செலவிடுகின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா..? இந்த வருட வர்த்தகம், உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு பார்க்கும் போது சுமார் 5000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருக்கலாம் என ஃபர்ஸ்ட்போஸ்ட் கணித்துள்ளது.

இத்தகைய வர்த்தகத்தால் சிறிய தொழிற்சாலைகள் பெரிய அளவில் பலன் அடையும், கடைகள் அதிக பணம் சம்பாதிக்கின்றன மற்றும் அதிக தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+