பொது தேர்தல் சுமார் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடத்தப்படுவதாக ஃபர்ஸ்ட் போஸ்ட் மதிப்பிடப்பட்டுள்ளது ஆச்சரியத்தை அளிக்கும் அதேவேளையில், ஒவ்வொரு பொருட்களுக்கும் எவ்வளவு செலவாகிறது என்ற புள்ளிவிபரம் கூடுதல் ஆச்சரியத்தை அளிக்கிறத.
உலகின் மிக விலையுயர்ந்த தேர்தலாக 2024 இந்திய பொது தேர்தல் விளங்குவதோடு, இந்த தேர்தலை சுற்றி நடக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் வாயிலாக பெரிய பொருளாதாரம், வேலைவாய்ப்பு சந்தை உள்ளது.

உண்மையில் தேர்தல்கள் இந்தியாவில் சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. உதாரணமாக இந்தியா உலகின் ஏழாவது பெரிய நாடு, மொத்த பரப்பளவு 3.2 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் இப்போது இவ்வளவு பெரிய நாட்டில் பிரச்சாரம் செய்வது சுலபமான விஷயமில்லை. இதற்கு மக்கள் பலம் மட்டும் அல்லாமல் பண பலமும் தேவை. இதற்காக தான் இந்த 120 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.
சில நேரங்களில் வேட்பாளர்கள் ஒரே நாளில் பல நகரங்களில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களை கவர் செய்யும் வகையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனவே அவர்களுக்கு பைக், கார், ஜீப் முதல் ஹெலிகாப்டர்கள், பிரைவேட் விமானங்கள் என அனைத்து போக்குவரத்தும் தேவைப்படுகிறது.
கார், பைக், ஜீப் ஆகியவை எளிதாக வாடகைக்கு கிடைக்கும் இவை அனைத்தும் ஒரு நாளுக்கு 1500 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரையிலான வாடகைக்கு கிடைக்கிறது.
இதேபோல் ஹெலிகாப்டர் 1 மணிநேரத்திற்கான கட்டணம் 1 - 2 லட்சம் ரூபாய் ஆகும், பிரைவேட் ஜெட் விமானத்தில் 10 முதல் 15 பேர் உடன் ஒரு மணி நேர பயணத்திற்கு 4.5 முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டில் தேர்தலில் 126 கோடி ரூபாயை பயணத்திற்காக காங்கிரஸ் செலவிட்டது, பாஜக 250 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டது, இந்த ஆண்டு அது 2019 ஐ விட 40% அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு தான்.
இதை தொடர்ந்து பிரச்சாரத்திற்கு படை பலத்தோடு வருவது மட்டும் அல்லாமல் பிரச்சார கூட்டத்திற்கு வருவோருக்கு உணவு அளிக்கப்படுவது வாடிக்கையான ஒரு விஷயம். அதுவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையில் தேர்தல் பிரச்சாரம் என்றால் பிரியாணி பிரதான உணவாக மாறிவிட்டது. இது என்ன பிரியாணி என்பது அடுத்த பஞ்சாயத்து.
உணவுக்கு தேர்தல் ஆணையம் விலை நிர்ணயம் செய்துள்ளது, அதன் படி தான் ஒவ்வொரு அரசியல் கட்சியும் செலவு செய்ய வேண்டும். சமோசா, டீக்கு தலா 10 ரூபாய், காபி, குளிர்பானங்களுக்கு தலா 15 ரூபாய், சைவ மீல்ஸ் (Veg Thali) 100 ரூபாய், அசைவ தாலிக்கு 180 ரூபாய் வரையில் செலவு செய்யலாம்.
இதேபோல தான் அனைத்து சேவைகளுக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது, அதேபோல் ஒரு லோக்சபா தொகுதிக்கு ரூ.95 லட்சத்தைத் தாண்டக்கூடாது என்ற உத்தரவு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கணக்கை தாண்டி தான் பெரும்பாலான இடத்தில் செலவு செய்யப்படும்.
தேர்தல் பிரச்சாரம் நடக்கும் நாளில் மட்டும் பூ விற்பனை 25 கோடி ரூபாய்க்கு வாங்கப்படுகிறது, குறிப்பாக ரோஜா பூ, மோரிகோல்டு பூ அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.
More From GoodReturns

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்குபதிவு!! வாக்காளர்களை வரவேற்கும் ரோபோ!!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications