சென்னையில் தங்கம் விலை தடாலடியாக சரிந்துள்ளது. ஜனவரி 29ஆம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 1, 34,000 ரூபாய் என்ற அளவில் இருந்தது . அதுவே இன்று 1,04,000 ரூபாய் என்ற அளவில் குறைந்திருக்கிறது. அதாவது தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருந்து சவரனுக்கு 30,000 ரூபாய் குறைந்திருக்கிறது.
திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கு தங்க நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய ஏராளமான மக்கள் கடைகளுக்கு சென்று தங்க நகை வாங்க தொடங்கி இருக்கிறார்கள். ஏனெனில் தங்கத்தை நாம் நகையாக வாங்கும் போது அதில் இருக்கும் தங்கத்திற்கு என மட்டுமில்லாமல் செய்கூலி , சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றையும் சேர்த்து செலுத்தி ஆக வேண்டியிருக்கிறது. தங்கம் விலை குறையும் போதும் ஒட்டுமொத்தமாக நாம் நகை வாங்க கொடுக்கும் பணமும் குறைகிறது.

எனவேதான் இந்த விலை வாய்ப்பை பயன்படுத்தி ஏராளமான மக்கள் தங்கம் வாங்க கடைக்கு செல்ல தொடங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தான் தேர்தல் ஆணையம் செக் வைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணப்பட்டுவாடா மற்றும் பொருட்களை கொடுப்பதை தடுக்கும் நோக்கத்தில் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கார் , பேருந்து, ரயில்கள் என அனைத்து வாகனங்களிலும் இந்த பறக்கும் படையினர் சோதனை என்பது மிக தீவிரமாக இருக்கிறது. மக்கள் தங்கள் கையில் 50000 ரூபாய் வரை மட்டுமே ரொக்கமாக வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் ரொக்க பணம் வைத்திருந்தால் அதற்கு உரிய ஆவணத்தை காட்டுவது கட்டாயம். இன்றைய தேதிக்கு ஒரு சவரன் நகை வாங்கவே 1 லட்சம் ரூபாய்க்கு மேல் தேவை. எனவே நகை வாங்க செல்வோர் பறக்கும் படையினரிடம் சிக்கி கொள்ளாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம்.

அந்த வகையில் தங்கம் விலை குறைந்து இருக்கிறது, உடனடியாக நகை வாங்கி விடலாம் என கடைக்கு புறப்படும் முன்பு சில விஷயங்களை செய்தால் உங்களுடைய பணமும் தங்க நகையும் காப்பாற்றப்படும். நகை வாங்க செல்வோர் கையில் ரொக்கமாக பணம் கொண்டு செல்வதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். வேறு வழியில்லை என்பவர்கள் பணம் எங்கிருந்து வந்தது என்ற ஆதாரத்தை காட்ட வேண்டும்.
உதாரணமாக வங்கிகணக்கில் இருந்து எடுத்துள்ளீர்கள், வைப்பு தொகையில் இருந்து எடுத்துள்ளீர்கள் எனும் போது வங்கி கணக்கு அறிக்கையை ஒரு ஆவணமாக காட்டலாம், போனில் வந்த மெசேஜ் , வங்கி கணக்கு புத்தகம் அல்லது ஆன்லைன் ஸ்டேட்மெண்டை ஆதாரமாக காட்டலாம். இல்லை எனும் போது பணத்தை 50,000 என்ற வகையில் பிரித்து தனி தனி கார்களில் , வாகனங்களில் கொண்டு செல்லலாம்.
கடைக்கு சென்று நகை வாங்கிய பின் ஆன்லைன் பரிமாற்றம் செய்யலாம், அதிகமான தொகை என்றால் நகை கடைக்கு காசோலை தந்து நகையை ரிசர்வ் செய்து கொள்ளலாம். பணம் அவர்கள் கைக்கு வந்த உடன் நகையை டெலிவரி பெறலாம். இவ்வாறு நகை வாங்குபவர்கள் அவற்றுக்கான ரசீதை கையில் கொண்டிருக்க வேண்டும். புதிய நகை வாங்கி செல்லும் வழியில் பறக்கும்படையினர் சோதனை செய்தாலும் ரசீதினை காட்டினால் விட்டுவிடுவார்கள். இல்லை என்றால் நகையை பறித்து கொள்வார்கள். பின்னர் அலைந்து திரிந்து தான் அதனை வாங்க முடியும். எனவே நகை வாங்கி செல்லும் போது கையில் ரசீதினை வைத்திருப்பது அவசியம்.
பழைய நகைகளை போட்டு புதிய நகை வாங்க போகிறேன் அந்த பழைய நகைக்கு என்ன ஆதாரம் காட்டுவது என்ற கேள்வி எழலாம். முடிந்த வரை பழைய நகைகளை பைகளில் வைக்காமல் ஆபரணமாக அணிந்து செல்வது நல்லது இல்லை என்றால் வருமான வரி த்துறையின் அங்கீகாரம் பெற்ற நகை மதிப்பீட்டாளரிடம் self-declaration form வாங்கி அந்த சான்றிதழை வைத்து கொள்வதும் அவசியம். இதனை ஒரு ஆவணமாக காட்டலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications