நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்கள் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் வேளையில் தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகள் உடன் தேர்தல் நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு வாகனங்களையும் கடுமையாகச் சோதனை செய்வதில் துவங்கி, ஒவ்வொரு தொகுதிக்கும் கட்சிகள் எவ்வளவு செலவு செய்கிறது என்பது வரையில் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
மேலும் தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்யலாம் என்பதையும், ஒவ்வொரு பொருட்களுக்கும் எவ்வளவு தொகையைக் கணக்குக் காட்டலாம் என்பது வரையில் அறிவித்துள்ளது. டீ, காபியில் துவங்கி மைக்செட், பேனர் வரையில் சுமார் 200 பொருட்கள் மற்றும் சேவைக்குக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது தேர்தல் ஆணையம்.

சமோசா, டீக்கு தலா 10 ரூபாய், காபி, குளிர்பானங்களுக்கு தலா 15 ரூபாய், சைவ மீல்ஸ் (Veg Thali) 100 ரூபாய், அசைவ தாலிக்கு 180 ரூபாய் வரையில் செலவு செய்யலாம். இந்த கட்டண முறையைக் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் உத்தரவு.
இந்த உணவுக் கட்டணங்கள் மற்றும் பிற பொருட்கள் - சேவை கட்டணங்களைத் தேர்தல் ஆணையம் உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை செய்து தேர்தல் பிரச்சாரத்திற்குத் தேவையான, பயன்படும் 200 பொருட்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் பல கட்ட ஆலோசனைக்குப் பின்பு உருவாக்கியுள்ளது.
மேலும் வாகனங்களை வாடகைக்கு எடுப்பதற்குக் குறிப்பிட்ட கட்டணங்கள் தேர்தல் ஆணையத்தால் விதிக்கப்பட்டு உள்ளது. பைக்குகள் ஒரு நாளைக்கு ரூ.300, இ-ரிக்ஷாக்கள் ரூ.600, டாடா சஃபாரி மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற எஸ்யூவிகள் ஒரு நாளுக்கு 3000 ரூபாய். இதுவே Toyota Innova, Toyota Fortuner, and Mitsubishi Pajero போன்ற பெரிய வாகனங்கள் என்றால் ஒரு நாளைக்கு 3200 ரூபாய், ஒரு நாளைக்கு ஆட்டோக்கள் ரூ.850, ஸ்பீக்கர் கொண்ட ஆட்டோவுக்கு ரூ.1,350 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
மல்டிபிளக்ஸ்களில் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் வினாடிக்கு ரூ.463. செய்தித்தாள்களில் ஒரு சதுர சென்டிமீட்டருக்கு ரூ.50 முதல் ரூ.290 வரை அச்சு விளம்பரங்கள். ஒரு ட்ரோன் கேமராவை வாடகைக்கு எடுக்க ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ரூ.16,000, மேலும் நட்சத்திர பிரச்சாரகர்களுக்கு ஹெலிபேடை பயன்படுத்த ரூ.2.3 லட்சம் வரையில் செலவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையும் பட்டியலிட்டு உள்ள பொருட்களில் மைக், ஸ்பீக்கர், வாகனங்கள், பேன், நாற்காலிகள் மற்றும் பிற உபகரணங்களை வாடகைக்கு எடுப்பதற்கான கட்டணங்கள் அடங்கும். சைவம் மற்றும் அசைவ உணவுகள், காலை உணவு மற்றும் சிற்றுண்டிகளுக்கு தனித்தனி விலைகள் உள்ளன. பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அவற்றின் எம்ஆர்பி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பொருட்களான கச்சோரி ரூ.15, சாண்ட்விச்கள் ரூ.25, ஜிலேபி ஒரு கிலோ ரூ.90 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த செலவுகளின் அடிப்படையில், அரசியல் கட்சிகள் தனது ஒட்டுமொத்த செலவில் மொத்தமாகச் சேர்த்தால், ஒரு லோக்சபா தொகுதிக்கு ரூ.95 லட்சத்தைத் தாண்டக்கூடாது என்ற உத்தரவு விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு முன், வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் பட்டியலிடப்பட்ட சேவைக்கு உட்பட்டுத் தான் செலவு செய்கிறாரா என்பதை உறுதி செய்வதற்காகப் பிரச்சார நிகழ்வுகளைப் பதிவு செய்யவும், பகுப்பாய்வு செய்யவும் தேர்தல் ஆணையம் சிறப்புக் குழுக்களை அனுப்புகிறது.
இதற்கிடையில், அரசியல் கட்சிகளின் எஸ்எம்எஸ் மற்றும் குரல் அழைப்பு பிரச்சாரங்களை இந்திய தேர்தல் ஆணையம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இந்த பிரச்சாரங்களுக்கு மீடியா சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழுவின் முன் அனுமதி தேவை.
தேர்தல் செலவுகளின் வரம்பு மீறுவதைத் தடுக்க, இந்த பிரச்சாரங்களுக்கான செலவினங்களைக் கண்டறியத் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் தேர்தல் ஆணையம் கூடுதலாக இணைந்து செயல்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications