டெல்லி: தேர்தல் காரணமாகப் பல வர்த்தக துறை பாதிப்படைந்துள்ளது என்பதை மறுக்க முடியாது, தேர்தல் கட்டுப்பாடுகள் காரணமாக ரொக்கப்பணம் புழக்கம் நாடு முழுவதும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் தங்கம் வாங்குவது முதல் கார் வாங்குவது வரையில் பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக கார் விற்பனை சூடுபிடித்திருந்த வேளையில், இந்திய சந்தையில் தற்போது தேவை குறைந்து வருகிறது. இதன் காரணமாக, மே மாத இறுதிக்குள் 4 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்படாமல் கையிருப்பில் இருக்கும் என கார் உற்பத்தியாளர்கள் கணித்துள்ளனர்.

இந்த 4 லட்சம் வாகனங்களின் மதிப்பு ரூ.44,000 கோடி எனக் கணிக்கப்பட்டுள்ளது, தற்போது சந்தையில் இருக்கும் கார்களின் சராசரி மதிப்பு 11 லட்சமாகும். தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியான பின்பு, வர்த்தக சந்தை சீரான பின்பு தான் இந்த கார்களின் உண்மையான நிலை தெரியவரும் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார் டீலர்களுக்கு, கார் தொழிற்சாலையிலிருந்து வாகன விநியோகம் தேவைக்கும் அதிகமாக வருவதால் இந்த பிரச்சனை தலையை மீறி சென்றுள்ளது. வாகன விற்பனையைக் குறிக்கும் பயணிகள் வாகனப் பதிவுகள், கடந்த ஆண்டை விட மே மாதத்தில் 5% வரை குறைய வாய்ப்புள்ளது. இந்த ஆண்டில் இது இரண்டாவது சரிவாகும்.
பொதுத் தேர்தல் முடிவுகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மை, திருமண சீசன் முடிவடைந்தாலும், டெல்லி NCR உட்பட பல முக்கிய சந்தைகளில் வெப்ப அலைகள் அதிகரித்துள்ள காரணங்களால் கார் விற்பனை பெரிய அளவில் சரிந்துள்ளது. இதனால் கார் விற்பனை சரிவுக்கு பொதுத் தேர்தல் மட்டும் காரணமில்லை.
கார் உற்பத்தியாளர்கள் மே மாத இறுதிக்குள் 340,000 - 350,000 வாகனங்களை டீலர்களுக்கு டெலிவரி செய்யும் என எதிர்பார்க்கின்றனர். இது கடந்த ஆண்டை விட 4-4.5% அதிகமாகும். அளவுக்கு அதிகமாக தேக்கத்தில் உள்ள கார்கள் குறித்து டீலர்கள் பேசுகையில், சில நிறுவனங்கள் திட்டமிட்டு உற்பத்தி நிறுத்தி, உற்பத்தி அளவைக் குறைத்துள்ளது. இதன் மூலம் கையிருப்பில் இருக்கும் கார்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்துவதற்கு உதவியுள்ளது, ஆனால் பெரும்பாலான நிறுவனங்கள் இதை செய்யவில்லை என்று கூறுகின்றனர்.
கியா இந்தியாவின் தேசிய விற்பனைத் தலைவர் ஹர்தீப் சிங் பிரார் கூறுகையில், புதிய அரசு பதவியேற்ற பிறகு கார் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
பருவமழைக்கான கணிப்பு சாதகமாக உள்ளது, நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும் காரணத்தால் வட்டி விகிதங்கள் இந்த ஆண்டு இறுதியில் குறைய வாய்ப்புள்ளது என ஹர்தீப் சிங் பிரார் கூறுகிறார்.
மே மாதத்தில் கார் பதிவுகள் தொடர்ச்சியாக 10% வரை குறைய வாய்ப்புள்ளதாக பிரார் கணித்துள்ளார், இருப்பினும் புதிய மாடல் அறிமுகம் செய்யும் காரணத்தால் இந்த ஆண்டு விற்பனையிலும் வளர்ச்சியைக் காணும் என அறிவித்துள்ளார்.
இதேபோல் இருப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் கார் உற்பத்தி நிறுவனங்கள் தள்ளுபடி அளிக்குமா என்ற கேள்வியும் எழும் வேளையில், சந்தையில் ஏற்கனவே போட்டியின் காரணமாக விலைகள் கட்டுப்படுத்தி இருக்கும் வேளையில் தள்ளுபடிக்கு வாய்ப்பு குறைவு என ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!



Click it and Unblock the Notifications