பொது தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வேளையில், இந்த நாளில் வாக்கு எண்ணிக்கை எப்படி துவங்கும்..? யாரெல்லாம் வாக்கு எண்ணும் இடத்தில் இருப்பார்கள்..? வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடம் எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியாது. இதை கண்முன் கொண்டும் வரும் செய்தி தான் இது.
தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் முன்னிலையில் காலை 7 மணியளவில் ஸ்டிராங் ரூம் திறக்கப்படும். ஸ்டிராங் ரூம் என்பது தேர்தலில் வாக்குப்பதிவு முடிந்து EVM இயந்திரங்களை 24X7 பாதுகாப்புடன் வைக்கப்படும் அறை.

இந்த ஸ்டிராங் ரூம்-ஐ திறக்கப்படும் போது வீடியோ பதிவு செய்யப்படும், இந்த தருணத்தில் தேர்தல் அதிகாரி மற்றும் தேர்தல் ஆணையத்தின் சிறப்புப் பார்வையாளரும் உடன் இருப்பார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் (EVM) கன்ட்ரோல் யூனிட்-ஐ வாக்கு எண்ணும் மேசைக்கு கொண்டு வருவதன் மூலம் வாக்கு எண்ணிக்கை செயல்முறை தொடங்குகிறது.
சிசிடிவி கேமராக்கள் வாயிலாக வாக்கு எண்ணிக்கையின் முழு செயல்பாட்டையும் கண்காணித்து வீடியோவில் பதிவு செய்கின்றன. ஒவ்வொரு கன்ட்ரோல் யூனிட்-ம் தனிப்பட்ட ID மற்றும் சீல் பொருத்தப்பட்டு இருக்கும், இதை வேட்பாளரின் வாக்குச் சாவடி முகவருக்கும் (polling agent) காட்டப்படும். அதன் பின்னர், கண்ட்ரோல் யூனிட்டில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம், ஒவ்வொரு வேட்பாளருக்கும் வாக்குகள் EVM திரையில் தோன்றத் தொடங்கும்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் 15 மேசைகள் இருக்கும், இதில் 14 மேஜைகள் வாக்கு எண்ணிக்கைக்கும், ஒரு மேஜை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு ஒதுக்கப்படும். வாக்கு எண்ணப்படும் நாளன்று காலையில் ஒவ்வொரு மேசைக்கும் வாக்கு எண்ணும் ஊழியர்களை மாவட்டத் தேர்தல் அதிகாரி நியமிப்பார்.
தேர்தல் கமிஷன் விதிகளின்படி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் நியமிக்கப்பட்ட முகவர், வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஒவ்வொரு மேஜையிலும் இருப்பார். இதேபோல் வாக்கு எண்ணும் மையத்தில் 15 முகவர்களுக்கு மேல் அனுமதி இல்லை. ஒவ்வொரு வேட்பாளரும் தங்கள் முகவரைத் தேர்ந்தெடுத்து, முகவரின் பெயர், புகைப்படம் மற்றும் ஆதார் அட்டையை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிப்பார்கள்.
வாக்கு எண்ணும் ஊழியர்கள், தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணிக்கை முடியும் வரை, எந்த வேட்பாளரின் முகவரும் வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை, வாக்கு எண்ணிக்கை பணியில் இருப்பவர்களைத் தவிர வேறு யாரும் மொபைல் சாதனத்தை உள்ளே கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வாக்கு எண்ணிக்கையில் முகவர்கள் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளது என சந்தேகம் எழுந்தால், அவர்கள் மறு எண்ணிக்கை செய்யக் கோரலாம், ஆனால் மறு எண்ணிக்கை முடிவுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகுதான் நடக்கும்.
மேலும் வாக்குகள் எண்ணப்பட்டதும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திரும்பவும் ஸ்டிராங் ரூம்-க்கு திரும்பும். தேர்தல் விதிகளின்படி, அதிகாரப்பூர்வமாக மறு எண்ணுக்கு உத்தரவிடப்பட்டால், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு 45 நாட்களுக்கு EVMகள் ஸ்டிராங் ரூம்-ல் இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்படுகின்றன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications