இஸ்ரேல் தேர்தலை களவாடிய அரபு கட்சிகள்.. அழுது புலம்பும் பெஞ்சமின் நெதன்யாகு..!

இஸ்ரேலில் நேற்று மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மத்தியில் தான் பெரும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது எதிர்பார்க்காத வகையில் அரபு கட்சிகள் 19 இடங்கள் வரையில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டு இருக்கும் காரணத்தால் அரபு கட்சிகளின் துணையில்லாமல் யூத கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இன்று லிகுட் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் தற்போதைய பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகு, நேற்று நடைபெற்ற தேர்தல் திருடப்பட்டு உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேல் தேர்தலை களவாடிய அரபு கட்சிகள்.. அழுது புலம்பும் பெஞ்சமின் நெதன்யாகு..!

இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான மக்கள் வாக்கு அளித்தனர், பெஞ்சமின் நெதன்யாகு தேர்தல் நடக்கும் வேளையில் கல்லூரி, பப், ரெஸ்டாரென்ட் என அனைத்து இடத்திற்கும் சென்று அரபு கட்சிகள் நம்நாட்டின் சுதந்திரத்தைக் கெடுக்கத் திட்டம் போட்டு வருகின்றனர் என வெளிப்படையாகப் பிரச்சாரம் செய்தார்.

இந்த நிலையில் இன்று பெஞ்சமின் நெதன்யாகு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் அரபு கட்சிகள் இந்த தேர்தலில் வாக்காளர் மோசடி மற்றும் வாக்காளர்களை மிரட்டி தங்கள் கட்சிக்கு வாக்களிக்க வைத்தாகவும் கூறினார்.

இந்த குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரேல் காவல்துறையும், இஸ்ரேலின் உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டும் விசாரணை நடத்த வேண்டும் என லிகுட் கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளது. லிகுட் கட்சி தனது குற்றச்சாட்டில், அரபு கட்சிகள் பயங்கரவாதத்தையும், யூத அரசை அழிப்பதையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டு உள்ளது.

இதனால் இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரபு கட்சிகள் லஞ்சம், மிரட்டல், வன்முறை, போலி ஆவணங்கள், சட்டவிரோதமாக இயங்கும் சாப்ட்வேர் மூலம் வாக்குகளைத் திரட்டுதல் என பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு இந்த தேர்தலில் வாக்குகளைத் திருடியுள்ளதாக லிகுட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இஸ்ரேலில் அரபு கட்சிகள் என்பது ராம் மற்றும் ஜாயின்ட் லிஸ்ட் கட்சிகள் அடங்கியது. இந்த தேர்தலில் இஸ்ரேல் வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் 19 இடங்களில் வெற்றி பெறும் என எக்சிட் போல் கணிப்புகள் தெரிவித்துள்ளதன் விளைவாகவே அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை லிகுட் கட்சியின் தலைவர் பெஞ்சமின் நெதன்யாகு புலம்ப துவங்கியுள்ளார்.

இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் 120 இடங்கள் இருக்கும் வேளையில் 61 இடங்களை பெறும் கட்சியான ஆட்சியை பிடிக்க முடியும், தற்போது அரபு கட்சிகள் 19 இடங்களை பெறும் காரணத்தால் அரபு கட்சிகள் ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+