இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள 5 மாநில தேர்தலும், 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பொது தேர்தலும் அனைத்து தரப்புக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும் வேளையில், அமெரிக்காவின் மிகப்பெரிய தனியார் முதலீட்டு வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனமாக இருக்கும் ஜெப்ரீஸ் முக்கியமான சந்தை ஆய்வை வெளியிட்டு பங்குச்சந்சை முதலீட்டாளர்களை கதறவிட்டு உள்ளது.

ஜெப்ரீஸ் நிறுவனத்தின் சர்வதேச பங்குச்சந்தை திட்டமிடல் பிரிவின் தலைவரான கிரிஸ் வுட் பிசினஸ் ஸ்டாண்டர்ட் சம்மிட் 2023 கூட்டத்தில் பேசிய போது இந்தியாவில் எதிர் வரும் 2024 பொது தேர்தலில் பிஜேபி பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடிக்காவிட்டால் இந்திய பங்குச்சந்தை சுமார் 25 சதவீதம் வரையில் சரியும் என தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச்சந்தைக்கு இது மிகப்பெரிய ரிஸ்க் ஆக இருக்கிறது. பிஜேபி 3வது முறையாக ஆட்சியை பிடிக்காவிடில் பங்குச்சந்தையில் மிகப்பெரிய கரெக்ஷன் வரும் என கூறினார். இதேவேளையில் 2004ல் பொது தேர்தல் போல் ஆட்சி மாற்றம் நடந்தால் பங்குச்சந்தை 25 சதவீதம் வரையில் சரிந்தாலும் விரைவில் மீண்டு எழும் எனவும் கிரிஸ் வுட் உறுதி அளித்துள்ளார்.
2014 பொது தேர்தலுக்கு முந்தைய 6 மாதத்தில் நிஃப்டி 13.7 சதவீதமும், 2019 பொது தேர்தலுக்கு முந்தைய 6 மாதத்தில் நிஃப்டி 13.8 சதவீதமும் வளர்ச்சி பாதையில் இருந்தது. இதேபோல் இந்த வருடமும் தற்போதைய சந்தை நிலவரத்தின் படி 2024 தேர்தலுக்கு முன்பு இந்திய சந்தை வளர்ச்சி பாதைக்கு மிகவும் சதாகமாகவே உள்ளது.
இதேபோல் 2009 தேர்தலுக்கு முந்தைய 6 மாதத்தில் வெறும் 3.5 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்த நிஃப்டி தேர்தலுக்கு பிந்தைய 6 மாதத்தில் 53.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்பு 1991 ஆம் ஆண்டில் தேர்தலுக்கு பிந்தைய 6 மாதத்தில் அதிகப்படியாக 42.9 சதவீதம் உயர்ந்தது. இவ்விரு தேர்தல்களை தவிர அனைத்து தேர்தல்களின் 6 மாத பிந்தைய காலத்தில் அதிகப்படியான தடுமாற்றம் கண்டு உள்ளது.
ஆனால் 5 வருட கால அளவை பார்க்கும் போது கடந்த 4 பொது தேர்தலில் சராசரியாக 14 சதவீத CAGR வளர்ச்சியை அடைந்துள்ளது. உதாரணமாக 2004 தேர்தலுக்கு பிந்தைய 5 வருட ஆட்சி முடிவில் 14.7 சதவீதமும், 2009 தேர்தலுக்கு பிந்தைய 5 வருடத்தில் 16.2 சதவீதமும், 2014 தேர்தலுக்கு பிந்தைய 5 வருடத்தில் 13.2 சதவீதமும், 2019 தேர்தலுக்கு பிந்தைய 5 வருடத்தில் 14.7 சதவீதம் (கணிப்பு) CAGR வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் ஜெப்ரீஸ் நிறுவனத்தின் சர்வதேச பங்குச்சந்தை திட்டமிடல் பிரிவின் தலைவரான கிரிஸ் வுட் பேசுகையில் பல எச்சரிக்கை அளிக்கும் விஷயங்கள் இருந்தாலும், வளரும் சந்தையில் இந்தியாவின் வளர்ச்சி பாதை மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக ஆசியாவில் மிகவும் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.

சீனாவின் வீழ்ச்சியில் இந்தியா சிறப்பாக வாய்ப்புகளை தேடி பிடித்துள்ளது, இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் இந்தியா தனி மதிப்பீட்டையும், முதலீட்டையும் பெற்றுள்ளது. மேலும் இந்தியா நீண்ட கால முதலீட்டுக்கு சிறந்த சந்தையாக மாற்றியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications