இந்திய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் மூலம் அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது. இந்த முறை தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களுக்கும், வருமான வரி துறைக்கும் பிரச்சனை உருவெடுத்துள்ள வேளையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் முக்கியமான முடிவுடன் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கிறது.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த 1300 நிறுவனங்கள், அந்த நன்கொடை தொகைக்கான வரி சலுகையைப் பயன்படுத்திக்கொண்டு வரி செலுத்தியிருக்கும் வேளையில் மத்திய வருமான வரித்துறை வரி சலுகை குறித்து நிறுவனத்திடம் கேள்வி கேட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது தான் தற்போதைய பிரச்சனைக்கு முக்கியமான காரணம். மத்திய வருமான வரித்துறை தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடைக்கு வரி பிடித்தம் செய்து வரி செலுத்தியுள்ளது தொடர்பாக சில நிறுவனங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தேர்தல் பத்திரங்கள் வாங்கிய அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த முக்கிய நிறுவனங்கள் பட்டியலில், இன்ஃபோசிஸ், எம்பஸி குழுமம், மேகா இன்ஜினியரிங், ஆதித்ய பிர்லா குழுமம், JSW ஸ்டீல், டோரென்ட் பார்மா, லூப்பின், இண்டாஸ், பார்தி ஏர்டெல் மற்றும் அலெம்பிக் ஃபார்மாஸ்யூட்டிகல்ஸ் லிமிடெட் என பல பிரபலமான நிறுவனங்கள் அடங்கும்.
2018 ஆம் ஆண்டு ஜனவரியில் அறிவிக்கப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அரசியலமைப்பு சட்டத்திற்குப் புறம்பானது என தீர்ப்பளித்து, இத்திட்டத்தை இனி பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்தது. இந்த தேர்தல் பத்திர திட்டம் மூலம் 2018 முதல் 2024 வரை அரசியல் கட்சிகளுக்கு ரூ.16,518 கோடி நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது வருமான வரித்துறை இத்தொகை குறித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது தொடர்பான விபரத்தை இந்திய தொழில் துறை அமைப்புகள், மத்திய நிதி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த நிலையில் வரவிருக்கும் பட்ஜெட்டில் இப்பிரச்சனைக்கான தீர்வு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிமுறைகள்: பொதுவாக, அரசியல் கட்சிகளுக்கும், எலகட்ரல் டிரஸ்ட் அமைப்புகளுக்கும் அளிக்கப்படும் நன்கொடைக்கு, வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 80GGB மற்றும் 80GGC களின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
ஆனால், 2018 ஆம் ஆண்டில் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகம் செய்த பின்னர், 2018 மூலமாகவே நன்கொடை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட நன்கொடைகள், வருமான வரிச் சட்டம் 1961ன் பிரிவு 13A கீழ் வரி விலக்கு பெற்றிருந்தன.
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து வரி சலுகை தொடர்ந்து அளிக்கப்படுவதில் வருமான வரித்துறைக்கு குழப்பம் ஏற்பட்டு, வரி சலுகை பெற்ற நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கான தீர்வை மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications