பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட தேர்தல் பத்திர நடைமுறை, வெளிப்படையானதாக இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதை தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பிக்க வேண்டும் என்று ஒரு நாள் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தரவுகளைத் தொகுத்து இந்தியத் தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடும். இதில் ஏப்ரல் 12, 2019 முதல் பிப்ரவரி 15, 2024 வரையில் வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்கள் பொதுக் வெளியில் மக்களின் பார்வைக்குக் கிடைக்கும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் இரண்டு தனித்தனி பட்டியல்களை வழங்கும், ஒரு பட்டியலில் பத்திரங்கள் வாங்கிய தேதி, வாங்குபவரின் பெயர் மற்றும் ஒவ்வொரு பத்திரத்தின் மதிப்பும் இருக்கும். மற்றொரு பட்டியலில் அரசியல் கட்சிகளால் பணமாக்கப்படும் ஒவ்வொரு பத்திரத்தின் விவரங்களையும், பணமாக்கப்படும் தேதி மற்றும் பத்திரத்தின் மதிப்பும் இருக்கும்.
ஆனால் ஒரு விஷயம் குறித்து எஸ்பிஐ, தேர்தல் ஆணையம் வெளியிட வாய்ப்பில்லை, இதேவேளையில் இந்த ஒரு விஷயம் தான் முக்கியமான திருப்பு முனையாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு தேர்தல் பத்திரத்திலும் அச்சிடப்பட்ட தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு இருக்கும், இதை குறிப்பிட்ட ஒளியின் கீழ் மட்டுமே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விபரம் வெளியில் வராது என தெரிகிறது, ஆனால் இதுதான் மிகவும் முக்கியமான விஷயம் எனப் பேசப்படுகிறது.
எஸ்பிஐ தரவுகள் படி இந்த தனித்துவமான எண்ணெழுத்து குறியீடு கணினியில் பதிவு செய்யப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு தேர்தல் பத்திர திட்டம் உருவாக்கப்பட்ட போது பொருளாதார விவகாரத்துறை செயலாளராக இருந்த முன்னாள் நிதி செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறுகையில் ஒவ்வொரு பத்திரத்திலும் உள்ள தனிப்பட்ட குறியீடு பாதுகாப்பு அம்சம் என்றும், விற்பனை செய்யும் நேரத்திலோ அல்லது டெபாசிட் செய்யும் நேரத்திலோ பதிவு செய்யப்படவில்லை என்றார். இந்த ஒரு விபரம் இல்லாமல் அரசியல் கட்சி மற்றும் நன்கொடையாளர் தரவுகளைப் பொருத்துவது சாத்தியமில்லை எனக் கூறுகிறார்.
ஆனால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை வாதாடும் மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் quid pro quo முறையில் போதுமான ஆதாரங்கள் வங்கியின் தரவுத்தொகுப்பில் இருக்கும் என்று நம்புகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தை (ADR) தரப்பில் வாதிடும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் கூறும் போது SBI ஆல் நன்கொடையாளர் விவரங்கள் மற்றும் வாங்குபவர் விவரங்களுக்கு அளிக்கப்படும் தனித்தனி எண் தரவுகளை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார். இதை வைத்து எந்த நன்கொடையாளர், எந்த கட்சிக்குப் பணம் கொடுத்துள்ளார் என்பதை பற்றி தெரிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.
"யார் யாருக்கு நிதியளிக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பயிற்சியின் முழு நோக்கமாகும். SBI இரண்டு தனித்தனி எண்களைக் கொண்டுள்ளது, மேலும் அவை தேர்தல் பத்திரத்தின் நன்கொடையாளர் மற்றும் வாங்குபவர் தரவுத் தாள்களுடன் கொடுக்க வேண்டும். இல்லையெனில் எஸ்பிஐக்கு எதிராக மீண்டும் அவமதிப்பு மனு தாக்கல் செய்வோம்" என்று பூஷன் கூறினார்.
மேலும் உச்ச நீதிமன்றம் இதுகுறித்து கூறுகையில் இரு பிரிவு தரவுகளின் matching exercise அல்லது "வாங்குபவர் மற்றும் அரசியல் கட்சியுடன் தொடர்புப்படுத்த" SBI க்கு அவசியமில்லை, தரவுகள் வெளியிடப்பட்டால் இதை மற்றவர்கள் எளிதாகச் செய்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications