உலக வெப்பமயமாதல் காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மிகுந்த வெப்பம் கண்ட மாதமாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக இந்தியாவில், வெப்பநிலை தொடர்ந்து 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயர்ந்திருந்தது.
இதனால் பெங்களூர் போன்ற குளிரான பகுதிகளில் கூட மக்கள் அதிகப்படியான வெயிலின் தாக்கத்தை எதிர்கொண்டனர். இந்த தாக்கத்தால், மக்கள் dehydration-ல் இருந்து தப்பிக்க ஜூஸ், இளநீர் போன்றவற்றை வாங்குவதைப் போல ஓரல் எலக்ட்ரோலைட் ஆன எலக்ட்ரால்-ஐ அதிகம் வாங்கியுள்ளனர்.

ஏப்ரல் மாதம் எப்போதும் இல்லாத வகையில் Electral விற்பனை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வருடாந்திர அளவில் சுமார் 26% விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உடலில் dehydrationஐ சரிசெய்யும் மருந்துகளில், மாதாந்திர அடிப்படையில் Electral விற்பனை அதிகமாக இருந்தது.
IQVIA நிறுவனத்தின் சந்தை ஆராய்ச்சி அறிக்கையின் படி, எலக்ட்ராலின் விற்பனை மாதாந்திர அடிப்படையில் 28% வளர்ச்சி கண்டு, உள்நாட்டுச் சந்தையில் சுமார் ரூ.72 கோடி அளவிற்கு விற்பனை செய்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பம் அதிகரித்ததன் காரணமாக, மார்ச் மாதத்தில் நாட்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மருந்துகளில் 20வது இடத்தில் இருந்த எலக்ட்ரால், ஏப்ரல் மாதத்தில் சந்தையில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது.
குளிர்காலம் முடிந்த பிறகு, சுவாசக் கோளாறு மற்றும் தொற்றுநோய்க்கான சிகிச்சை மருந்துகளின் விற்பனை குறைந்ததால், மார்ச் மாதத்தில் இந்திய மருந்து விற்பனை சந்தை சரிவைச் சந்தித்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் சந்தை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் குடல் இயக்க மருந்துகள், பான் மற்றும் பான் டி (19% மற்றும் 17% விற்பனை வளர்ச்சி), கல்லீரல் சிகிச்சை மருந்துகள் லிவ்-52 (17% வளர்ச்சி) மற்றும் யூடிலிவ் (28% வளர்ச்சி) ஆகியவற்றின் விற்பனை அதிகரிப்பால், வருடாந்திர ஒப்பீட்டில் 9% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில், நீரிழிவு சிகிச்சைக்கான மருந்து மிக்ஸ்டார்ட் ரூ.75 கோடி விற்பனையுடன் முதலிடத்தைப் பிடித்தது. இதனைத் தொடர்ந்து சுவாசக் கோளாறு சிகிச்சைக்கான மருந்து ஃபொறாக்கோர்ட் (ரூ.74 கோடி) மற்றும் நீரிழிவு எதிர்ப்பு மாத்திரை கிளைகோமெட்-ஜிபி (ரூ.73 கோடி) ஆகியவை முதல் 3 இடத்தை இடம்பிடித்துள்ளன.


Click it and Unblock the Notifications