Ola, Ather, TVS அதிர்ச்சி..! ஜூன்1 முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் 15% ஆக குறைப்பு!

2023 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்குப் FAME-II திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது. கடந்த வாரமே மத்திய அமைச்சகம் இதற்கான பரிந்துரையை அமைச்சர்கள் குழுவுக்கு கொடுத்திருந்தது.

இதற்கான ஒப்புதல்கள் கிடைத்த உடன் புதிய மாற்றங்களை கனரக தொழிற்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களுக்கு, இனி அதாவது ஜூன் 1 ஆம் தேதி முதல் ஒரு kWhக்கு 10,000 ரூபாய் மட்டுமே ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

Ola, Ather, TVS அதிர்ச்சி..! ஜூன்1 முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியம் 15% ஆக குறைப்பு!

மின்சார இரு சக்கர வாகனங்களுக்கான மானிய தொகையின் வரம்பு, தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளது. இதனால் சந்தையில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் விலை ஜூன் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது.

உதாரணமாக ஒரு பிராண்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 40000 ரூபாய் மானியம் கிடைத்தால் தற்போது 15000 ரூபாய் மட்டுமே கிடைக்கும், இது நேரடியாக விற்பனை விலையில் பாதிக்கும். மக்களுக்கு இந்த சுமையை குறைக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலையை குறைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.

எலக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை வேகமாக மக்கள் ஏற்றுக்கொள்ளவும், நிறுவனங்கள் அதை அதிகமாக உற்பத்தி செய்யவும் FAME என்ற திட்டம் மத்திய அரசு ஏப்ரல் 1, 2019 அன்று மூன்று ஆண்டுகள் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இத்திட்டம் இது மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டு மார்ச் 31, 2024 வரையில் அறிவிக்கப்பட்டது.

மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு அதாவது மக்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக FAME திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிலான தொகையை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டம் மூலம் மக்கள் வாங்கும் வாகனங்களின் இறுதி விலைக்கு மானியம் அளிக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+