பெட்ரோல் விற்கும் விலைக்கும், லேட்டெஸ்ட் கார்களின் மைலேஜ் ஆகியவைற்றைப் பார்க்கும் போது புதிய கார் வாங்குவது நினைத்தாலே வேண்டாம்டா சாமி நான் பைக்குலேயே போறேன் எனச் சொல்லத் தான் தோன்றுகிறது. இந்த நிலையில் தான் அனைவரின் முக்கியமான தேர்வாக மாறுகிறது எலக்ட்ரிக் கார்.
இந்தியாவில் விற்கப்படும் தொடர்ந்து மேம்பட்டு வருவது மட்டும் அல்லாமல் சார்ஜிங் ஸ்டேஷனும் மேம்பட்டு வரும் வேளையில் எலக்ட்ரிக் கார் என்பது அனைவருக்கும் முக்கியத் தேர்வாக மாறியுள்ளது. ஆனால் இதிலும் பிரச்சனை, பெட்ரோல் கார்களை ஒப்பிடுகையில் எலக்ட்ரிக் கார்களின் விலை அதிகம். இதனால் பெரும் பகுதி மக்கள் எலக்ட்ரிக் கார் வாங்குவதில் அதிகப்படியான தயக்கத்தைக் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா - பிரிட்டன் நாடுகளுக்கு இடையே ஃப்ரீ டிரேட் ஒப்பந்தம் எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முயற்சியில் இருக்கும் வேளையில், இதில் எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து முக்கியமான அறிவிப்பு உள்ளதாகத் தெரிகிறது.
தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி இங்கிலாந்தில் இருந்து சில எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டாடா குழுமம் தனது புதிய EV பேட்டரி தொழிற்சாலையைத் தென்மேற்கு இங்கிலாந்து பகுதியான Somerset-ல் அமைக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது
ஃப்ரீ டிரேட் ஒப்பந்தத்தில் இங்கிலாந்தில் இருந்து ஆண்டுதோறும் இறக்குமதி செய்யப்படும் 80,000 டாலர் விலைக்கு அதிகமான 2,500 எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 30 சதவீத சலுகைக் கட்டணத்தை இந்திய அரசு அளிக்கத் தயாராக உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இரு தரப்பில் இருந்து வெளிவரவில்லை.
இந்தியாவில் தற்போது 40,000 டாலர் வரையில் மதிப்பு கொண்ட கார்களுக்கு 70 சதவீத வரியும், 40,000 டாலருக்கு அதிகமாக மதிப்பு கொண்ட கார்களுக்கு 100 சதவீதமும் வரி விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் கார்களை உற்பத்தி செய்வதில் உறுதி அளிக்கும் பட்சத்தில் இறக்குமதி வரி விதிப்பைக் குறைக்கும் முடிவை எடுத்துள்ளது.
இது நடைமுறைக்கு வந்தால் டெஸ்லா பெரிய அளவில் பயன்பெறும், ஆகஸ்ட் மாதம் Tesla India Motor & Energy Pvt Ltd புனே விமன் நகரில் உள்ள பஞ்ச்ஷில் பிஸ்னஸ் பார்க்-ல் புதிய அலுவலக இடத்தைக் குத்தகைக்கு எடுத்தது முதல் வரி குறைக்கும் பணியில் டெஸ்லா தீவிரமாக இருந்தது.


Click it and Unblock the Notifications