எலக்ட்ரிக் கார்களை தெறிக்க விடும் ஹைபிரிட் கார்கள்.. 4 கார் தான் மொத்த துறையும் காலி..!!

இந்தியாவில் கடந்த சில மாதங்களில், ஹைபிரிட் கார்களின் விற்பனை தடாலடியாக அதிகரித்து வருகிறது. மாருதி சுசூகி மற்றும் டொயோட்டா மோட்டார் போன்ற நிறுவனங்களின் பிரபலமான ஹைபிரிட் கார் மாடல்களை அறிமுகப்படுத்தி சந்தையை வியக்க வைத்துள்ளது.

இதன் விளைவாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இணையாகப் போட்டியில் ஹைபிரிட் கார்கள் சந்தையை கைப்பற்றும் அளவுக்கு வேகமாக முன்னேறி வருகின்றன. இந்த மாற்றம் இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு மிகவும் முக்கியமானது.

 எலக்ட்ரிக் கார்களை தெறிக்க விடும் ஹைபிரிட் கார்கள்.. 4 கார் தான் மொத்த துறையும் காலி..!!

எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகத்தின் போதே இந்தியாவில் சார்ஜிங் கட்டமைப்பு போதுமானதாக இல்லாத காரணத்தால் ஹைப்ரிட் கார்கள் தான் சிறந்தது என பேச்சு நிலவியது, ஆனால் டெஸ்லா போன்ற முன்னணி பிராண்டுகளின் மோகத்தால் இது காணாமல் போனது.

இதேபோல் ஆட்டோமொபைல் நிறுவனங்களும் ஹைப்ரிட் கார்களை காட்டிலும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பது எளிதாக இருந்த காரணத்தாலும், ஹைப்ரிட் தொழில்நுட்பம் இல்லாத காரணத்தாலும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டியது.

இந்த பிரச்சனையை உடைத்தது டோயோட்டா, ஜப்பான் நாட்டு நிறுவனம் இந்திய வர்த்தக சந்தையில் வளர்ச்சி அடையப் போராடிக்கொண்டு இருக்கும் போது, ஹைபிரிட் டெக்னாலஜியை வைத்து மாருதி சுசூகி உடன் மெகா டீல் போட்டு இன்று எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கத்தை தங்களுடைய 4 ஹைப்ரிட் கார்களை வைத்து தகர்த்து வருகிறது.

ஜாடோ டைனமிக்ஸ் என்ற ஆலோசனை நிறுவனத்தால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில், இந்தியாவின் மொத்த பயணிகள் வாகன சந்தையில் ஹைபிரிட் வாகனங்கள் 2.48% பங்கைக் கொண்டிருந்தன. அதே சமயம், எலக்ட்ரிக் வாகனங்கள் 2.63% பங்கைக் கொண்டிருந்தன. இந்த வேகம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா போன்ற கார் உற்பத்தியாளர்களும் ஹைபிரிட் வாகனங்களை அறிமுகப்படுத்த ஆர்வம் காட்டுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, இந்த நிதி ஆண்டிலேயே விற்பனையில் ஹைபிரிட் கார்கள், எலக்ட்ரிக் வாகன சந்தையை முந்திவிடும் என தொழில் துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் மத்திய அரசு ஹைபிரிட் கார்களுக்கான வரியை குறைக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. தினசரி பயன்பாட்டிலும், ஒட்டுமொத்த உற்பத்தி சங்கிலியிலும் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் ஹைப்ரிட் கார்கள் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதாக ஆய்வுகள் வெளியாகும் வேளையில், இந்த கார்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு வரியை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கான முடிவுகள் தேர்தல் முடிவுகள் வந்த பின்பு புதிதாக அமையும் ஆட்சி எடுக்கும் முடிவுகளில் தான் அனைத்தும் அடங்கியுள்ளது.

தற்போது, இந்திய சந்தையில் மருதி சுசூகி, டொயோட்டா மோட்டார், ஹோண்டா மோட்டார் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே ஹைபிரிட் கார்களை விற்பனை செய்கின்றன. இந்த கார்களில் மின்சார மோட்டார் ஒன்றும், பெட்ரோல் அல்லது டீசல் போன்ற பாரம்பரிய எரிபொருள் எஞ்சினும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஹைபிரிட் கார்கள் குறைந்த அளவு கார்பன் வெளியேற்றத்தையும் அதிக எரிபொருள் திறனையும் வழங்குகின்றன.

இந்தியாவில் தற்போது ஆடம்பர பிரிவு அல்லாமல் 4 ஹைபிரிட் கார்கள் மட்டுமே உள்ளது, டோயோட்டா நிறுவனத்தில் Urban Cruiser Hyryder, Innova Hycross. இதேபோல மாருதி சுசூகி பிராண்டில் Maruti Suzuki Invicto, Maruti Suzuki Grand Vitara, ஹோண்டா நிறுவனத்தில் Honda City Hybrid eHEV இது ஒரு செடான் கார் என்பதால் இன்றைய SUV ஆதிக்க சந்தையில் இதையொரு போட்டியாகவே யாரும் கண்டுக்கொள்வதில்லை என்பது வருத்தமான விஷயம்.

எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடும் போது, ஹைபிரிட் கார்களின் ஆரம்ப விலை குறைவாக இருப்பது, நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்றது என்பது போன்ற சில முக்கியமான நன்மைகள் உள்ளன.

அதே சமயம், எலக்ட்ரிக் வாகனங்களைப் போல் முழுக்க முழுக்க மின்சாரத்தால் இயங்காததால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவாக இருந்தாலும், முற்றிலும் இல்லை.

இந்தியாவின் எரிபொருள் விலைகள் உயர்ந்து வரும் சூழலில், எரிபொருள் திறன்மிக்க ஹைபிரிட் கார்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகப்படியான கவனத்தைப் பெற்று வருகின்றன. இதேபோல் எலக்ட்ரிக் கார்களின் மிகவும் மோசமான பிரச்சனை என்றால் அது, range fear தான், இது எலக்ட்ரிக் கார்களின் முற்றிலும் இல்லை.

இதன் காரணமாக, எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே எதிர்காலம் என்ற நிலை மாறி, ஹைபிரிட் கார்களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதிர்வரும் காலங்களில் ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் எவ்வாறு போட்டி போட்டுக்கொள்கின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்பதில் தனி சுகம்.

இதேபோல் புதிதாக கார் வாங்க போகும் மக்களும் ஹைபிரிட் கார்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+