பிசினஸ் காலி ஆயிடுமோ..? பயத்தில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்..!

இந்திய ஆட்டோமொபைல் துறை கடந்த 10 மாதங்களுக்கு மேல் மிகக் கடினமான சூழல்களைக் கடந்து வந்து கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து விற்பனை சரிவு, அதனால் உற்பத்தியைக் குறைத்தது, உற்பத்தி வேலை குறைந்ததால் ஊழியர்களுக்கு வேலை இல்லா நாட்கள் என, ஆட்டோமொபைல் துறையினருக்கு ரண கொடூரமாக இருந்தது இந்த 2019-ம் ஆண்டு.

இந்தியாவில், ஆட்டோமொபைல் துறையின் விற்பனை சரிவுக்கு, அரசின் தடாலடியான பல்வேறு புதிய விதிமுறைகள் தொடங்கி முக்கிய கொள்கை மாற்றங்கள் வரை அத்தனை காரணங்கள் இருக்கின்றன.

சில காரணிகள்

சில காரணிகள்

1. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம்
2. மோட்டார் வாகன இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிப்பு
3. வாகன கடன் பெறுவதில் சிக்கல்
4. எதை வாங்குவது - புதிய பி எஸ் 6 ரக வாகனங்களா அல்லது பழைய பி எஸ் 4 ரக வாகனங்களா என்கிற குழப்பம்
5. பி எஸ் 4 ரக வாகனங்களை வாங்கினால் வாகன பதிவு என்ன ஆகும் என்கிற பயம்.. என பல காரணங்களைச் சொல்லலாம்.

உலக சந்தை

உலக சந்தை

ஆனால் ஒரு விஷயம், ஃபோர்ட் (Ford) ஃபோக்ஸ் வேகன் (Volkes Wagen) தொடங்கி நம் ஊர் மாருதி சுசூகி, டாடா வரை... அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களையும் ஆட்டம் காண வைத்திருக்கிறது. சொல்லப் போனால் பயத்தைக் காட்டி இருக்கிறது என்றால் அது எலெக்ட்ரிக் வாகனங்கள் தான்.

மின்சார வாகனம்

மின்சார வாகனம்

மின்சார வாகனங்கள், வழக்கமான ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வியாபாரத்தை காலி செய்து விடுவோ என்று பயப்படும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது என்று பார்ப்பதற்கு முன்... மின்சார வாகனங்களைப் பற்றிப் பார்த்து விடுவோம். மின்சார வாகனங்கள் 1.ஹைப்ரிட் 2. எலெக்ட்ரிக் என இரு வகை உண்டு.

ஹப்ரிட் வகை

ஹப்ரிட் வகை

ஹைப்ரிட் - இந்த வகையான வாகனங்கள், தன் இன்ஜினை இயக்க ஒரு குறிப்பிட்ட அளவு சக்தியை வழக்கமான பெட்ரோல் போன்ற எரிபொருட்களில் இருந்து எடுத்துக் கொள்ளும். மாருதி சுசூகியின் பலேனோ (Baleno), டொயோட்டா நிறுவனத்தின் ப்ரியஸ் (Prius) ரக கார்கள் இதற்கு உதாரணம்.

எலெக்ட்ரிக் வாகனம்

எலெக்ட்ரிக் வாகனம்

எலெக்ட்ரிக் ரக வாகனங்கள் முழுக்க முழுக்க, மின்சார சக்தியில் மட்டுமே, தன் இன்ஜினை இயக்கும். இந்த ரக வாகனங்களுக்கு தான் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருளுக்கு பதிலாக மின்சாரத்தை சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். டெஸ்லாவின் மாடல் 3, மாடல் எக்ஸ், மாடல் எஸ் போன்ற கார்களைச் சொல்லலாம்.

இந்த ஆண்டு விற்பனை

இந்த ஆண்டு விற்பனை

கடந்த 2018-ம் ஆண்டின் முதல் 10 மாதத்தில், 4.06 மில்லியன் மின்சார வாகனங்கள் (ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக்) தான் விற்பனை ஆனதாம். ஆனால் இந்த 2019-ம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 4.89 மில்லியன் மின்சார வாகனங்கள் (ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக்) விற்பனை ஆகி இருக்கிறதாம்.

செல்லாது செல்லாது

செல்லாது செல்லாது

இந்த போங்கு ஆட்டம் எல்லாம் செல்லாது, ஹைப்ரிட்டை இந்த எண்ணிக்கையில் இருந்து கழித்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டும் இந்த அளவுக்கு விற்பனை வளர்ச்சி இருக்காது என ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. அப்படிப் பார்த்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது.

எலெக்ட்ரிக் மட்டும்

எலெக்ட்ரிக் மட்டும்

கடந்த 2018-ம் ஆண்டின் ஜனவரி முதல் அக்டோபர் வரையான 10 மாதத்தில், சுமாராக 9,37,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் தான் விற்பனை ஆனதாம். ஆனால் இந்த 2019-ம் ஆண்டின் அதே முதல் 10 மாதங்களில் சுமாராக 12,04,000 எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஆகி இருக்கிறதாம். ஆக எப்படி கணக்கு போட்டாலும் மின்சார வாகனங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.

மொத்த வியாபாரத்தில்

மொத்த வியாபாரத்தில்

இந்த 2019-ம் ஆண்டில், சீனாவில் விற்பனையான மொத்த வாகனங்களில் 08% மின்சார வாகனங்கள் (ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக்). அதே போல ஐரோப்பாவில் விற்பனை ஆன மொத்த வாகனங்களில் 07% மின்சார வாகனங்களாம். இவர்களைத் தொடர்ந்து அமெரிக்காவில் விற்பனையான மொத்த வாகனங்களில் 04% மின்சார வாகனங்களாம்.

ஆச்சர்யம்

ஆச்சர்யம்

இந்த தரவுகளுக்கு மத்தியில் ஒரு அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகி இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2019-ம் வரை, மின்சார வாகனங்களின் விலையை பயங்கரமாக அதிகரித்து இருக்கின்றனவாம். அமெரிக்காவில் 55% மற்றும் ஐரோப்பாவில் 42% அதிகரித்து இருக்கிறதாம். ஆனால் சீனாவில் இதே காலகட்டத்தில் மின்சார வாகனங்களின் விலை சுமார் 50% சரிந்து இருக்கிறது. ஆக விலை அதிகரித்தாலும் வாங்க ஆள் இருக்கிறார்கள்.

புரிதல்

புரிதல்

ஏற்கனவே ஐநா சபை, உலக வெப்பமயமாதலையும், சுற்றுச்சூழல் சீர் கேடுகளையும் தடுத்து நிறுத்த தன்னால் ஆன நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. மக்களும் தங்கள் பங்குக்கு கரியமில வாயு வெளியீட்டைக் குறைக்க விரும்புகிறார்கள். அதோடு மின்சார வாகனங்களை (ஹைப்ரிட் மற்றும் எலெக்ட்ரிக்) அசால்டாக பயன்படுத்தவும் தொடங்கிவிட்டார்கள்.

பயம்

பயம்

பல நாடுகளில், மின்சார வாகனங்கள் விற்பனை ஆகிறது என்றால், பெட்ரோல் டீசல் வாகனங்களைத் தயாரிக்கும், மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், ஃபோர்ட், மஹிந்திரா & மஹிந்திரா, நிஸான் தொடங்கி சொகுசு கார்களைத் தயாரிக்கும் பிஎம்டபிள்யூ, மெர்சிடஸ் பென்ஸ், ஆடி போன்றவர்கள் வரை பதட்டம் ஆகத் தானே செய்வார்கள். அந்த பயம் தான் அவர்களை மின்சார வாகன தயாரிபை நோக்கி தள்ளிக் கொண்டு இருக்கிறது.

இந்திய நிறுவனங்கள்

இந்திய நிறுவனங்கள்

ஏற்கனவே இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள், பாரத் ஸ்டேஜ் 6 மாற்றத்தை எதிர் கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. இது போக மின்சார வாகனங்கள் வேறு தயாரிக்க வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். இந்த பாரத் ஸ்டேஜ் 6 மற்றும் மின்சார வாகனங்களின் விற்பனை, ஆட்டோமொபைல் நிறுவனங்களை (குறிப்பாக இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களை) பயத்தில் உறைய வைத்திருக்கிறது. பின்ன மின்சார வாகனத்தை நோக்கி மக்கள் போக ஆரம்பிச்சிட்டா, இவர்கள் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படுமே..! அது தான் இவர்கள் பயத்தின் அடிநாதம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+