சர்வதேச சந்தையில் ஹைட்ரஜென் எரிவாயுவில் இயங்கும் கார்கள் அறிமுகமாகி ஆட்டோமொபைல் துறையை அச்சுறுத்தி வரும் வேளையில், இந்திய சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களின் ஆதிக்கமும், பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களை வாங்குவோர் யோசித்து வாங்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது.
இப்படியிருக்கையில் மத்திய கனரகத் தொழில் துறை இணை அமைச்சர் பூபதிராஜு ஸ்ரீநிவாச வர்மா 2024 ஆம் ஆண்டில் எவ்வளவு எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது என்பது குறித்த முக்கியமான அறிக்கையை நாடாளுமன்றத்தில் வெளியிட்டு உள்ளார்.

இந்திய எலக்ட்ரிக் வாகன (EV) துறை தொடர்ந்து வளர்ந்து வரும் வேளையில் கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தகவல் படி, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் 13.06 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 10.39 லட்சம் எலக்ட்ரிக் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 25.64% அதிகம் என்பது தான் தற்போது ஆட்டோமொபைல் துறையில் முக்கியமான விவாத பொருளாக மாறியுள்ளது. நீங்க எலக்ட்ரிக் வாகனம் வாங்குவீர்களா அல்லது பெட்ரோல், டீசல் வாகனம் வாங்குவீர்களா..? கமெண்ட் பண்ணுங்க.
இதேவேளையில் மத்திய அரசு நாட்டில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மேலும் ஊக்குவிக்க,PM-PRADHAN Mantri Sankalp: Drive Electric Vehicle (PM-e-DRIVE) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் ரூ.10,900 கோடி செலவில் எலக்ட்ரிக் பேருந்துகள், எலக்ட்ரிக் மூன்று சக்கர வாகனங்கள், எலக்ட்ரிக் ரிக்ஷாக்கள், எலக்ட்ரிக் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மானியம் அளிக்கப்பட்டு உள்ளது.
PM-e-DRIVE திட்டம் ஏற்கனவே சாதகமான மாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஆதரிப்பதோடு கூடுதலாக, இந்த திட்டம் சார்ஜிங் நிலையங்கள் போன்ற கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும், சோதனை தளத்தை மேம்படுத்துவதற்கும் கவனம் செலுத்துகிறது.
இதேவேளையில் EV துறையில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து 'Make in India' திட்டத்தை ஆதரிக்க, PM-e-DRIVE திட்டம் கட்டாயமாக்கப்பட்ட தரப்படுத்தப்பட்ட உற்பத்தி திட்டத்தை (PMP) பின்பற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தியை உள்ளூர்மயமாக்கி வருகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications