தற்போதைய மக்களிடம் கார் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்திய சந்தைக்குள் நுழைய முயன்று வருகிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன. இதனால் கார் வாங்குபவர்களுக்கு எந்த வகையான காரை வாங்கலாம் என்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் கட்டுரையில் பெட்ரோல் டீசல் காரை வாங்கலாமா? அல்லது மின்சார எலக்ட்ரிக் காரை வாங்கலாமா என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.
பொதுவாக கார் வாங்குபவர்கள் விலையில் தான் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் பராமரிப்பு செலவுகள், எரிபொருள் செலவுகள், பழுது பார்ப்பு செலவுகள் போன்ற விஷயங்களை அதிகம் கவனிப்பதில்லை. பெட்ரோல் கார்கள் டீசல் கார்களை விட மலிவானவை. ஆனால் எலக்ட்ரிக் கார்கள் இவை இரண்டையும் விட விலை உயர்ந்தவை. எலக்ட்ரிக் கார்களின் சிறப்பம்சம் என்னவென்றால் இதற்கு பராமரிப்பு செலவுகள் குறைவு.

டாட்டா மோட்டார்ஸ், ஹூண்டாய், மகேந்திரா, ஃபோல்க்ஸ்வேகன் மற்றும் எம்ஜி மோட்டார்ஸ் ஆகியவை பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்கின்றன. டொயோட்டோ ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்கிறது. ஹோண்டா ஹைபிரிட் மற்றும் பெட்ரோல் கார்களை உற்பத்தி செய்கிறது. இதே போல ஒவ்வொரு பிராண்டும் எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் டீசல் கார்களை உற்பத்தி செய்கின்றன. இதனால் கார் வாங்கயிருக்கும் மக்களுக்கு எந்த காரை வாங்கலாம் என்ற குழப்பம் அவ்வப்போது ஏற்படுகிறது.
விலை வேறுபாடுகள்: எலக்ட்ரிக் கார்களை விட பெட்ரோல் டீசல் கார்கள் விலை மலிவானவை என்றும் முன்பே பார்த்தோம். உதாரணமாக டாடா நெக்ஸனின் பெட்ரோல் காரின் அடிப்படை மாடல் ரூ.8 லட்சம், டீசல் கார்கள் 10 லட்சம் ரூபாய். ஆனால் டாடா நெக்ஸனின் எலக்ட்ரிக் காரின் விலை 12.5 லட்சம். பெட்ரோல் கார்கள் விலை மலிவானதாகத் தோன்றினாலும் எந்த காரை வாங்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்கு முன்பு பராமரிப்பு செலவுகள் குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டும்.
பராமரிப்புச் செலவுகள்: பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் எலக்ட்ரிக் கார்களை விட விலை குறைவு என்றாலும் இதற்கு அதிகமான பராமரிப்புச் செலவுகள் தேவைப்படலாம். பெட்ரோல் விலை லிட்டருக்கு 107 ரூபாய்க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 96 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பெட்ரோல் கார்கள் லிட்டருக்கு 17 முதல் 21 கிலோமீட்டர் மைலேஜ்ஜையும், டீசல் கார்கள் லிட்டருக்கு 20 கிலோமீட்டர் முதல் 25 கிலோ மீட்டர் வரை மைலேஜ்ஜையும் வழங்குகிறது.
அப்படியானால் பெட்ரோல் கார்களில் 1 கிலோ மீட்டர் பயணம் செய்ய ரூ. 6 முதல் ரூ. 7 வரை செலவாகும். டீசல் கார்களில் ஒரு கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய நான்கு ரூபாய் வரை செலவாகலாம். எலக்ட்ரிக் வாகனங்களில் ஒரு கிலோமீட்டர் வரை பயணம் செய்வதற்கு வெறும் ரூ. 0.50 முதல் ரூ. 0.80 காசுகள் வரை செலவாகும்.
மின்சார வாகனங்களை விட பெட்ரோல் மற்றும் டீசல் கார்களுக்கு அதிக பராமரிப்புச் செலவுகள் இருக்கும். உதாரணமாக சர்விசிங் செய்வது, ஆயில் போடுவது என பல்வேறு செலவுகள் இதற்கு ஏற்படலாம். அதேபோல மின்சார வாகனங்களிலும் பேட்டரி பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை சரி செய்ய அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
பெட்ரோல், டீசல் கார்களைப் போல டீசல் போட்டதும் உடனடியாக பயணிக்க முடியாது. எலக்ட்ரிக் வாகனங்களில் சார்ஜிங் செய்ய 4 முதல் 5 மணி நேரம் வரை தேவைப்படும். எனவே ஒரு காரை தேர்ந்தெடுப்பதற்கு முன்பு உங்களுடைய பட்ஜெட், பராமரிப்பு செலவுகள், எதிர்கால போக்குகள் குறித்தும் கவனித்து முடிவு எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications