கரண்ட் பில் கட்டலையா? லிங்கை கிளிக் பண்ணி கட்டுங்க! இப்படி யாராவது சொன்னா உஷார் மக்களே! எச்சரிக்கும் SBI!

சில காலமாகவே நம் நாட்டில் நடக்கும் மோசடி சம்பவங்களுக்கு அளவே இல்லை. புதுப்புது டிரிக்கை கண்டுபிடித்து மக்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லாத வகையில் மோசடிக்காரர்கள் செயல்படுகின்றனர். ஒரு சிலர் மோசடிக்காரர்களின் யுக்திகளை செய்திகள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக தெரிந்து கொண்டு உஷாராகிவிடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ மாட்டிக்கொள்கின்றனர். இது போன்ற நபர்களுக்காக நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தற்போது மோசடிக்காரர்கள் மின்சார வாரியத்தின் பெயரைப் பயன்படுத்தி புதிய மோசடி ஒன்றை செயல்படுத்தி வருகின்றனர். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தங்களுடைய அதிகாரப்பூர்வ X பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உலா வரும் எலக்ட்ரிசிட்டி பில் மோசடி எப்படி நடக்கிறது என்பதை விரிவாக விவரித்துள்ளது.

கரண்ட் பில் கட்டலையா? லிங்கை கிளிக் பண்ணி கட்டுங்க! இப்படி யாராவது சொன்னா உஷார் மக்களே! எச்சரிக்கும் SBI!

எலக்ட்ரிசிட்டி பில் மோசடி எப்படி நடக்கிறது?: முதலில் பாதிக்கப்படும் நபர்களுக்கு ஒரு கால் வருகிறது. அதில் மோசடிக்காரர்கள் அவர்களுக்கான பில் நிலுவையில் இருக்கிறது என்று கூறுகின்றனர். உதாரணமாக எலக்ட்ரிசிட்டி பில், கேஸ் பில் மற்றும் வாட்டர் பில் போன்றவற்றுக்கு பணம் செலுத்தவில்லை என்று கூறுகின்றனர்.

உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மின்சாரம் துண்டிக்கப்படும் என்றும் பயமுறுத்துகின்றனர். ஒரு லிங்கை அனுப்பி அதன் மூலம் பேமென்ட் செய்ய சொல்கின்றனர். அதன் மூலம் பணம் செலுத்தி விட்டால் உடனடியாக அக்கவுண்டில் இருக்கும் முழு பணமும் மோசடிக்காரர்களின் அக்கவுண்டுக்கு மாறிவிடுகிறது. ஒரு சிலருக்கு உங்களுடைய கேஒய்சி விபரங்களை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்றும் அழைப்புகள் வருகிறது.

Also Read

இப்படி சொல்லி முதலில் பாதிக்கப்படுபவர்களுக்கு பயத்தை காண்பிக்கின்றனர். பேசுவது உண்மையிலேயே மின்சார வாரியத்தில் பணிபுரியும் அதிகாரிகளை போலவே உள்ளது. உடனடியாக அவர்கள் சந்தேகத்திற்கிடமான லிங்க், எஸ்எம்எஸ் மற்றும் வாட்சப் மெசேஜ் போன்றவற்றை அனுப்பி கேஒய்சி விபரங்களை அப்டேட் செய்யும்படி சொல்கின்றனர். இன்னும் சிலருக்கோ ஓடிபி மற்றும் பின் நம்பரை கேட்டு பாதிக்கப்படுபவர்களின் மொபைலை கண்ட்ரோல் செய்கின்றனர். இப்படித்தான் இந்த எலக்ட்ரிசிட்டி பில் ஸ்கேம் செயல்படுகிறது.

பாதுகாப்பாக இருப்பது எப்படி?: இத்தகைய மோசடிகளில் இருந்து உங்களை பாதுகாக்க வேண்டுமானால் எஸ்பிஐ வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவையும் வீடியோவையும் ஒருமுறை பாருங்கள். அதே போல உடனடியாக கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் அல்லது மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அழைப்புகள் வந்தால் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. சந்தேகத்திற்கிடமான லிங்க், முன்பின் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வாட்சப் மெசேஜ் ஆகியவற்றை கிளிக் செய்யக்கூடாது.

சில நேரங்களில் ஒரு சில டாக்குமெண்டை டவுன்லோட் செய்யும்படி மோசடிக்காரர்கள் உங்களை வற்புறுத்தலாம். அதேபோல ஓடிபி, ஏடிஎம் பின் போன்ற எந்த ஒரு ரகசிய தகவலையும் யாருடனும் பகிரக்கூடாது.

மெசேஜில் சந்தேகத்திற்கிடமான லிங்கை அனுப்பி அதில் பேமெண்ட் செய்ய சொல்லி மோசடிக்காரர்கள் உங்களை வற்புறுத்தலாம். இது போன்ற நேரங்களில் உஷாராக இருக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு அரசு அதிகாரியும் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு மாறாக உங்களிடம் இது போன்ற லிங்குகளை அனுப்பி பேமென்ட் அனுப்ப சொல்ல மாட்டார்கள்.விழிப்புணர்வுடன் செயல்படுவதை தவிர இது போன்ற மோசடிகளை தவிர்க்க வேறு வழியே இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+