சர்வதேச அளவில் சமூக வலைத்தள துறையின் வர்த்தகம் மற்றும் வருமானம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், எலான் மஸ்க் சுமார் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 12 முதல் 15 பில்லியன் டாலராக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த பெரும் மதிப்பீட்டின் சரிவை சமாளிக்க எலான் மஸ்க் டிவிட்டர் தளத்தை அடிப்படையாக வைத்து உலகமே வியக்கும் X என்னும் சூப்பர் ஆப் உருவாக்குவதன் மூலம் மீண்டும் 44 பில்லியன் டாலர் மதிப்பீட்டையும் தாண்டி உயர இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். இது மட்டும் அல்லாமல் அனைவருக்குமான தளமாக இந்த டிவிட்டர் இருக்கும் என எலான் மஸ்க் நம்புகிறார்.

எலான் மஸ்க் பல போராட்டங்களை தாண்டி, பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்து டிவிட்டரின் வளர்ச்சி பாதைக்கு கிளியரான ரோடு மேப் போட்டு சிஇஓ பதவியில் இருந்து வெளியேறி இப்பதிவிற்கு Linda Yaccarino-வை நியமித்துள்ளார். எல்லாம் சரியாக உள்ளது இனி நம்ம வேலையை பார்க்கலாம் என உட்கார்ந்த எலான் மஸ்க்-கிற்கு அடுத்த பிரச்சனை வெடித்துள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் டிரஸ்ட் அண்ட் சேஃப்டி பிரிவின் தலைவரான Ella Irwin வியாழக்கிழமை தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டிவிட்டர் நிறுவனத்தில் எலான் மஸ்க் தலைமையிலான நிர்வாகம் பல முக்கியமான மாற்றங்களை செய்த காலக்கட்டத்தில் Ella Irwin 2022 ல் trust and safety பிரிவின் தலைவராக உயர்ந்தார், இவரின் பதவி உயர்வுக்கு முக்கிய காரணம் இப்பதவியில் இருந்த Yoel Roth-ன் ராஜினாமா தான்.
இதற்கு முன்பு Ella Irwin டிவிட்டர் நிறுவனத்தில் கன்டென்ட் மாடரேஷன் பிரிவில் பணியாற்றி வந்தார். Ella Irwin டிரஸ்ட் அண்ட் சேஃப்டி பிரிவின் தலைவரான பின்பு எலான் மஸ்க் உடன் மிகவும் நெருங்கி பணியாற்றி வந்தார்.
குறிப்பாக டிவிட்டர் தளத்தில் கடுமையான மற்றும் மக்களின் மன புண்படுத்தும் வகையிலான கன்டென்ட் அதிகமாக இருப்பதாக குற்றச்சாட்டுகளை எழுந்த போது டிரஸ்ட் அண்ட் சேஃப்டி பிரிவின் தலைவரான Ella Irwin இதை உடனடியாக சரி செய்தார், இதேபோல் டிவிட்டர் கணக்குகளின் தகவல் பாதுகாப்பையும் எலான் மஸ்க் உடன் சேர்ந்து உறுதி செய்தார்.

இந்த நிலையில் தான் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வாக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும் என எலான் மஸ்க் முடிவு செய்த போது டிவிட்டர் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் எலான், Ella Irwin-ஐ தான் சிஇஓ-வாக நியமிப்பார என நம்பினர். Ella Irwin-ம் சிஇஓ-வுக்கான இன்டர்வியூவில் கலந்துக்கொண்டார்.
இதை தொடர்ந்த கடந்த வாரம் எலான் மஸ்க் டிவிட்டரின் புதிய சிஇஓ-வாக முன்னாள் NBC யூனிவெர்சல் விளம்பர பிரிவின் தலைவரான Linda Yaccarino-வை சிஇஓ-வாக நியமித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து தான் Ella Irwin தனது பதவியை ராஜினாமா செய்திருக்க கூடும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications