எலான் மஸ்க் (Elon Musk) நவீன தொழில்நுட்ப வரலாற்றில் மிகப்பெரிய நகர்வை செய்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் xAI ஆகிய இரு நிறுவனங்களையும் ஒரே நிறுவனமாக இணைத்துள்ளார். இதன் மூலம் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், சமூக ஊடகம், செயற்கை நுண்ணறிவு ஆகிய அனைத்தும் ஒரே குடையின் கீழ் வந்துள்ளன. இதுபோன்ற ஒரு கூட்டு நிறுவனம் உலகில் இதுவரை இல்லை.
இந்த இணைக்கப்பட்ட நிறுவனத்தின் மதிப்பு 1.25 டிரில்லியன் டாலராக இருக்கும். இது உலகின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாக மாறியுள்ளது. ஆனால் எதற்காக இந்த இணைப்பு, இதன் உண்மையான கதை என்ன..?

xAI என்பது செயற்கை நுண்ணறிவு நிறுவனமாகும், இந்த நிறுவனம் தனியாக இருப்பதால் ஒவ்வொரு மாதமும் சுமார் 1 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.9050 கோடி இழப்பை சந்தித்து வந்தது. இத்தகைய இழப்பு நிறுவனத்துக்கு நீண்டகால முதலீட்டாளர்களை ஈர்ப்பது கடினம்.
இதற்கு எலான் மஸ்க் புத்திசாலித்தனமான தீர்வை கண்டார், அதாவது இழப்பில் இயங்கும் AI நிறுவனத்தை லாபம் ஈட்டும் ஸ்பேஸ்எக்ஸுடன் இணைப்பது என்பது தான். ஸ்பைஸ்எக்ஸ் விரைவில் ஐபிஓ வெளியிட உள்ளதால் இது இரு நிறுவனங்களுக்கும் லாபம் அளிக்கும்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்பேஸ்எக்ஸ் ஒரு லாபம் ஈட்டும் நிறுவனம். கடந்த ஆண்டு 15 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இதில் 8 பில்லியன் டாலர் லாபம். நாசா, அமெரிக்க பாதுகாப்பு துறை, ஸ்பேஸ் ஃபோர்ஸ் ஆகியவற்றிடமிருந்து பல பில்லியன் டாலர் நீண்டகால ஒப்பந்தங்களை ஸ்பைஸ்எக்ஸ் பெற்று உள்ளன.
இந்த இணைப்பால் ஸ்பைஸ்எக்ஸ் நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது, முதலீட்டாளர்கள் ரிஸ்க் நிறைந்த AI ஸ்டார்ட்அப்பில் முதலீடு செய்வதாக இல்லாமல், லாபம் ஈட்டும் விண்வெளி நிறுவனத்தில் முதலீடு செய்வதாக பார்ப்பார்கள். அப்போது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு xAI என்பது கூடுதல் பலமாக இருக்கும்.
ஏற்கனவே xAI சமுக வலைத்தளத்தில் குறிப்பிடத்தக்க வருமானத்தை பெற்று வருகிறது, இதேபோல் ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா ஆகியவற்றுக்கு இலவச விளம்பர தளமாக உள்ளது. இதோடு எலான் மஸ்க் இத்தளத்தில் மிகவும் முக்கிய நபராகவும் உள்ளார். சரி இந்த இணைப்புக்கு உண்மையான காரணம் என்ன..?
இந்த இணைப்பு ஓபன்ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. ஓபன்ஏஐ கடந்த ஆண்டு 13 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. ஆனால் ஆண்டுக்கு 17 பில்லியன் செலவு செய்கிறது. 2030 வரை லாபம் ஈட்டுவது என்பது தற்போதைய சந்தை கணிப்பு.
இரு நிறுவனங்களும் பொதுச் சந்தைக்கு வரும் நிலையில், ஒன்று லாபம் ஈட்டும் விண்வெளி உள்கட்டமைப்புடன் AI பவர் கொண்டதாகவும், மற்றொன்று பெரும் இழப்புடன் வெறும் AI நிறுவனமாக இருக்கும். இந்த வேறுபாடு முதலீட்டு சந்தையில் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தும். இது முதல் வித்தியாசம்.
எலான் மஸ்க் இதோடு நிற்கவில்லை. அமெரிக்க பெடரல் தகவல் தொடர்பு ஆணையத்தில் (US Federal Communications Commission) ஒரு மில்லியன் செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கு ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளார். இவை இணைய சேவைக்கு அல்ல, விண்வெளியில் AI டேட்டா சென்டர்களை உருவாக்குவதற்காக.
சூரிய சக்தியால் இயங்கும் இந்த டேட்டா சென்டர்கள் உலகின் மிகக் குறைந்த விலையில் AI கம்பியூட்டிங் பவர் வழங்கும் என்று மஸ்க் கூறியுள்ளார். மற்ற ஏஐ நிறுவனங்கள் மின்சார பற்றாக்குறை மற்றும் நிலப்பரப்பு சிக்கல்களால் தவிக்கும் போது, எலான் மஸ்க் விண்வெளியில் இருந்து AI இயக்க திட்டமிட்டுள்ளார்.
விண்வெளியில் ஏஐ டேட்டா சென்டர் அமைப்பதற்கான அனைத்த கட்டமைப்பும் தற்போது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் xAI கூட்டணியில் இருப்பதால், இது மற்ற நிறுவனங்களும் சேவை அளிக்கலாம். இதன் மூலம் வருமானத்தை ஈர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது வெறும் இணைப்பு அல்ல. இது ஏஐ துறையில் எலான் மஸ்க் செலுத்தபோகும் ஆதிக்கத்தின் அறிவிப்பு. செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் ஒரு நகர்வாக டெக் உலகில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) மற்றும் xAI இணைப்பை பார்க்கப்படுகிறது.
மற்ற AI நிறுவனங்கள் இதை பின்தொடர வேண்டும் என்றாலும் ஒரு யுகமே தேவைப்படும், ஆனால் அமேசானிடம் இதற்கான கட்டமைப்பு உள்ளது. இந்திய முதலீட்டாளர்களும் இதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். AI மற்றும் விண்வெளி துறைகளின் எதிர்காலம் இங்கே தீர்மானிக்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications