உலகின் 2வது பெரும் பணக்காரரான எலான் மஸ்க் உலகச் சாதனை உடன் 2023 ஆம் ஆண்டை துவங்கியுள்ளார். எதற்காக உலகச் சாதனை எனக் குழம்ப வேண்டாம், ஒரு வருடத்தில் அதிகச் சொத்து மதிப்பை இழந்த நபர் என்ற கின்னஸ் உலகச் சாதனையைப் படைத்துள்ளார்.
எலான் மஸ்க் மட்டும் அல்லாமல் அவரை நம்பி டெஸ்லா நிறுவனத்தில் முதலீடு செய்த அனைவருக்கும் 2022 ஆம் ஆண்டுப் பெரும் சோதனை காலமாகவே இருந்தது.
இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டில் பல ஆண்டுகளின் முயற்சியின் கீழ் எலான் மஸ்க் சொத்து மதிப்பு யாரும் எட்ட முடியாத உயரமான 214 பில்லியின் டாலர் சொத்து மதிப்பீட்டை நீண்ட காலத்திற்குப் பின்பு இழந்தார்.
எலான் மஸ்க்
டெஸ்லா மற்றும் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் எலான் மஸ்க் 2022 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து டெஸ்லா முதலீட்டாளர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தினார்.
டெஸ்லா
டெஸ்லா என்பது எலான் மஸ்க்-ன் மூளை என்பதால் அதில் இருந்து கவனம் சிதறினால் கட்டாயம் டெஸ்லாவுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். இதனாலேயே டெஸ்லா முதலீட்டாளர்கள் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்க கூடாது என அறிவித்தனர். இதற்கு ஏற்றார் போல் சீனாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு விலைப்போர் உருவாகியுள்ளது.
டிவிட்டர்
இதற்கிடையில் எலான் மஸ்க் டிவிட்டரை வாங்குவதற்கு டெஸ்லா பங்குகளைச் சுமார் 30 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்தது மட்டும் அல்லாமல், 2022ல் பெரும் பகுதி நேரத்தை டிவிட்டர் நிறுவனத்திற்காகவும், டிவிட்டர் அலுவலகத்திலும் செலவு செய்தார்.
வரலாற்று இழப்பு
இதன் விளைவு டெஸ்லா பங்குகள் தொடர் வீழ்ச்சி, இதனால்
கடந்த ஆண்டில் தனது பெரும் செல்வத்தை எலான் மஸ்க் இழந்தார், அதற்காகக் கின்னஸ் உலகச் சாதனைகள் அவரை அங்கீகரித்துள்ளது. வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் தனிநபர் செல்வத்தை இழந்துள்ளார் எலான் மஸ்க்.
Guinness World Record அமைப்பு
Guinness World Records அமைப்பு எலான் மஸ்க் இதற்கு முந்தைய உலகச் சாதனையை முறியடித்துப் புதிய சாதனை படைத்துள்ளதாக அறிக்கை வெயிட்டு உள்ளது. ஒரு வருடத்தில் எலான் மஸ்க் நிகரச் சொத்து மதிப்பு 183 பில்லியன் டாலர் அளவில் சரிந்ததாக ஃபோர்ப்ஸ் கணக்கிட்டு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ப்ளூம்பெர்க் எலான் மஸ்க் 200 பில்லியன் டாலர் அளவில் சொத்து மதிப்பை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது.
ஜப்பான் மசயோஷி சன்
எலான் மஸ்க்-கிற்கு முன்பு ஒரு வருடத்தில் அதிகச் சொத்து மதிப்பு இழந்த நபராக ஜப்பான் நாட்டின் மசயோஷி சன் திகழ்கிறார். இவர் 2000 ஆம் ஆண்டில் சுமார் 58.6 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்துள்ளார்.
340 பில்லியன் டாலர்
எலான் மஸ்க் சொத்து மதிப்பு நவம்பர் 2021ல் அதிகப்படியாக 340 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்ததாகத் தெரிவிக்கிறது. எலான் மஸ்க் சொத்து மதிப்பில் பெரும் பகுதி டெஸ்லா பங்குகள் மட்டுமே என்பதால் 2022ல் டெஸ்லாகப் பங்குகள் 65 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. தற்போது எலான் மஸ்க் 144 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உள்ளார்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications