உலகின் மிகப்பெரிய பணக்காரர்களான எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் இருவரும் ஓரே வருடத்தில் சுமார் 20 பில்லியன் டாலர் அதாவது 1,50,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் மிகப்பெரிய பணப்புழக்கம் உருவாக்கியுள்ளது.
இந்தப் பங்கு விற்பனைக்குப் பின் இருக்கும் காரணம் என்ன..? எலான் மஸ்க் மற்றும் ஜெப் பெசோஸ் மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா உட்படப் பலர் தங்களது நிறுவன பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
டெஸ்லா எலான் மஸ்க்
உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் வரி செலுத்துவதற்கும், புதிய முதலீடுகளைச் செய்வதற்கும் தன்னிடம் இருந்த மொத்த டெஸ்லா பங்கு இருப்பில் 10 சதவீதத்தை விற்பனை செய்ய முடிவு செய்தார்.
எலான் மஸ்க்
இதன் அடிப்படையில் எலான் மஸ்க் பல பிரிவுகளாக டெஸ்லா பங்குகளை விற்பனை செய்தார். 2021ல் மட்டும் சுமார் 9.9 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளார். இது டெஸ்லா முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான புழக்கத்தை உருவாக்கியுள்ளது.
அமேசான் ஜெப் பெசோஸ்
இதேபோல் அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளைச் சிறிது சிறிதாக விற்பனை செய்து, பல புதிய நிறுவனத்திற்கும், பிற வர்த்தகத்திலும் முதலீடு செய்துள்ளார்.
மைக்ரோசாப்ட் சத்ய நாடெல்லா
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா தன்னிடம் இருந்த மைக்ரோசாப்ட் பங்கு இருப்பில் சுமார் 50 சதவீத பங்குகளை நவம்பர் 22 முதல் 24 வரையில் விற்பனை செய்துள்ளார். இதன் மூலம் சத்ய நாடெல்லா 8,39,000 பங்குகளைச் சராசரியாக 342 டாலருக்கு விற்பனை செய்து மொத்தம் 287 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டியுள்ளார்.
வால்மார்ட், ஆல்பபெட், பேஸ்புக்
சத்ய நாடெல்லா-வை தொடர்ந்து வால்மார்ட் நிறுவனத்தின் வால்டன் குடும்பம் 6.2 பில்லியன் டாலர் பங்குகளையும், கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களான லேரி பேஜ் மற்றும் செர்கி பிரின் ஆகியோர் தலா 1.5 பில்லியன் டாலர் ஆல்பபெட் பங்ககுளையும், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் 4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான மெட்டா பங்குகளையும் விற்பனை செய்துள்ளார்.
வாஷிங்டன் மாநில அரசு
அமெரிக்காவில் 2,50,000 டாலருக்கு அதிக மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்யும் போது long-term capital gains tax ஆகச் சுமார் 7 சதவீத வரியை வருகிற ஜனவரி 1, 2022 முதல் வாஷிங்டன் மாநில அரசு விதிக்க உள்ளது. இது அமெரிக்காவின் வாஷிங்டன்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும்.
வரித் தாக்கம்
இந்த வரி விதிப்பால் புதிதாகப் புதிதாக நிதி திரட்ட பங்குகளை விற்பனை செய்ய வேண்டுமெனில் ஜனவரி 1க்குப் பின் விற்பனை செய்யும் போது கூடுதாலாக வரியை செலுத்த வேண்டும். எனவே முன்கூட்டியே அனைவரும் பங்குகளை விற்பனை செய்து முதலீட்டைத் திரட்டியுள்ளனர். இதைப் பல நிறுவனத் தலைவர்கள் பின்பற்றியுள்ளதால் அமெரிக்கப் பங்குச்சந்தையில் அதிகப்படியான வர்த்தகம் உருவாகியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications