இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் பல வேலைகள் காணாமல் போகக்கூடிய சூழ்நிலை உள்ளது. இதில் ஐடி துறையை துவங்கி மருத்துவ துறை வரையில் பல வேலைவாய்ப்புகள் மாயமாகி வருகிறது.
இது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஏற்படும் காலத்தின் மாற்றம் என்றாலும், அடுத்த தலைமுறை எதில் அதிகப்படியான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.

தமிழ்நாடு:
உதாரணமாக தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் ஒரு காலத்தில் ஒட்டுமொத்த கல்வி துறையும் உற்பத்தி துறைக்கு முக்கியதுவம் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஐடி துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது டெக் துறையில் சிறப்பு படிப்புகளுக்கும் அதாவது சைபர் செக்யூரிட்டி, ஏஐ, உயர் தொழில்நுட்ப துறைக்கும் முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது.
மாற்று சிந்தனை:
இதேபோல் உலகளவிலும் இதேப்போன்ற மாற்றம் நிகழ்ந்தது, தற்போது உலகம் முழுவதும் வர்த்தக துறை தற்போது ஏஐ மற்றும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்திற்கும் முக்கியதுவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சில முக்கிய தொழில்நுட்பத் தலைவர்கள் அடுத்த தலைமுறையினரை எதிர்பாராத துறையில் கவனம் செலுத்த வலியுறுத்துகின்றனர். அது எந்த துறை என்பது தான் பேசு பொருளாக உள்ளது.
2 முக்கிய துறைகள்:
இன்றைய மாணவர்கள் (அடுத்த தலைமுறையினர்) சாப்ட்வேர் மற்றும் கோடிங் திறன்களை வளர்ப்பதற்கு பதிலாக, அடிப்படை அறிவியல் குறிப்பாக இயற்பியல் மற்றும் கணிதத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்விடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜென்சன் ஹுவாங் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் ஆகியோர் வலியுறுத்துகின்றனர்.
டெக் ஜாம்பவான்கள்:
இவ்விருவரும் டெக் துறையில் பெரும் புரட்சியை செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர்கள், இவர்களின் பரிந்துரையை தொழில்நுட்ப உலகின் எதிர்கால போக்குகளை பிரதிபலிக்கும் விதமான அமைந்துள்ளது.
AI களியாட்டம்:
சாப்ட்வேர் மற்றும் கோடிங் ஆகியவை தற்போது செயற்கை நுண்ணறிவு கருவிகள் மூலம் அனைவருக்கும் எளிதாக்கி வருவதால் அடுத்த 10 வருடத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் என்பது ஒரு எளிய திறனாக கருதப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் (LLM) தொடர்ந்து அதன் திறன்கள் மேம்பட்டு வருவதால், கோடிங் எழுதுதுவது மற்றும் டீபக்கிங் செய்வது போன்ற அடிப்படை புரோகிராமிங் திறன்களின் மதிப்பு இன்னும் சில வருடத்தல் குறைவானதாக கருதப்படும். இந்த ஏஐ கருவிகள் தானாகவே சிக்கலான மென்பொருள் பணிகளை கையாளும் திறனைப் பெற்று இருக்கும். இதனால் கோடிங் செய்பவர்களுக்கு தற்போது இருக்கும் மதிப்பும், வருமானமும் கட்டாயம் இருக்காது.
புதிய கண்டுப்பிடிப்பு:
இதை தொடர்ந்து எலான் மஸ்க் மற்றும் ஜென்சன் ஹுவாங் இருவரும், அடுத்த இன்னோவேஷன் அலை என்பது சிறந்த கோடிங் செய்பவர்களிடம் இருந்து வராது என்று தீவிரமாக நம்புகின்றனர். அதற்கு பதிலாக, உலக இயக்கத்தை புரிந்து கொள்ளும் சிந்தனையாளர்களிடமிருந்து தான் வரும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
அடுத்த புரட்சிகரமான கண்டுப்பிடிப்பு ராக்கெட் கட்டமைப்பு, சிப் வடிவமைப்பு அல்லது மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு உருவாக்கம் என எந்த துறையாக இருந்தாலும் சரி, வெற்றி பெறுவதற்கு அறிவியல் மற்றும் லாஜிக் அடிப்படையிலான அறிவு கொண்டவர்களுக்கு மட்டுமே சாதிக்க முடியும் என தெரிவித்துள்ளனர்.
Strong Conceptual Thinking, Creative Problem-Solving மற்றும் புதுமையான விஷயங்களை உருவாக்கும் அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை ஏஐ மூலமாகவோ அல்லது ஆட்டோமேஷன் தொழில்நுட்பமோ செய்ய முடியாது. இதனால், தொழில்நுட்பத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு இந்த அடிப்படை அறிவு அவசியமாகிறது.
இந்த அணுகுமுறை, தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்யும் வகையில் இருக்கிறது, ஏனெனில் அடிப்படை கோட்பாடுகளை அறிந்தவர்கள் மட்டுமே உண்மையான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும்.
Physical AI:
இன்றைய மாணவர்கள் இயந்திரங்களுடன் பேச கற்றுக்கொள்வதோடு நிறுத்திக் கொள்ள கூடாது, பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும், அதன் மூலம் இயந்திரங்களுக்கு உண்மையான புதிய அறிவை கற்பிக்க முடியும். இதை Physical AI என என்விடியா ஜென்சன் ஹுவாங் கூறுகிறார்.
எலான் மஸ்க், ஜென்சன் ஹுவாங்
என்விடியா ஜென்சன் ஹுவாங் சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் பேசும்போது Physical AI-ல் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்தார். இதேபோல் எலான் மஸ்க், டெலிகிராம் சிஇஓ Pavel Durov மாணவர்களை கணிதத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் எழுதிய பதிவில் Physics (with math) என்ற 3 சொற்களில் தனது மொத்த கருத்தையும் முன்வைத்தார்.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications